3rd of September 2013
சென்னை::வருகிறார் ஓவியா: பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவரும், ‘ஆடுகளம் பட வசனகர்த்தாவுமான விக்ரம் சுகுமாரன் ‘மத யானை கூட்டம் என்ற படத்தை இயக்குகிறார்.‘ ‘கலகலப்பு படத்துக்கு பிறகு தமிழில் சைலன்ட்டாகிவிட்ட ஓவியா ஹீரோயினாக நடிக்க ஹீரோவாக அறிமுகமாகிறார் கதிர். படத்தை தயாரித்தாலும் இசை அமைக்கும் பொறுப்பை என்.ரகுநந்தன் என்பவரிடம் ஒப்படைத்திருக்கிறார்
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்.
அட்டாக் நடிகர்கடந்த மாதம் நடிகை கனகா இறந்துவிட்டதாக வதந்தி பரவியது. அதற்கு பதில் அளித்த அவர் நான் உயிரோடுதான் இருக்கிறேன். என்னை பிடிக்காதவர்கள் யாரோ வதந்தி கிளப்புகிறார்கள்‘ என்றார்.
இதே பாணியில் பாலிவுட் நடிகரும், பொம்மலாட்டம் பட ஹீரோவுமான நானா படேகர் பற்றி கடந்த சனிக்கிழமை மும்பையில் மாரடைப்பால் இறந்துவிட்டதாக வதந்தி பரவியது. இதற்கு பதில் அளித்த நானா,‘ நான் அதிர்வுகளை தாங்குபவன். எனக்கு எந்த அட்டாக்கும் வராது. மற்றவர்களுக்குதான் அதை தருவேன் என்றார்.
ஊர் சுற்றும் ஸ்டார்ஸ் ஹீரோ, ஹீரோயின்கள் தாங்கள் நடித்த படங்களை விளம்பரப்படுத்துவதற்காக நேரடியாக ரசிகர்களை சந்திக்கும் வகையில் ஊர் ஊராக செல்கின்றனர். சமீபத்தில் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்துக்காக சிவகார்த்திகேயன், சூரி, இயக்குனர் பொன்ராம் உள்ளிட்ட பட குழுவினர் கோவை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, மதுரை ஆகிய இடங்களுக்கு சென்றனர்.
அதேபோல் ‘மதகஜ ராஜா பட புரமோஷனுக்காக விஷால், வரலட்சுமி சரத், சுந்தர்.சி ஆகியோர் கொச்சி, பெங்களூர், ஐதராபாத் ஆகிய இடங்களுக்கு செல்கின்றனர்.
பூஜா
இலங்கை படத்தில் பூஜா‘நான் கடவுள் படத்துக்கு பிறகு பூஜா நடிக்கும் படம் விடியும் முன். இவர் சிங்கள மொழியில் இதுவரை 4 படங்கள் நடித்திருக்கிறார். கடந்த ஆண்டு குச பபா என்ற படத்தில் நடித்தார். இந்த ஆண்டில் மீண்டும் ஒரு சிங்கள மொழிப் படத்தில் நடிக்கிறாராம். -
பாலு படத்துக்கு ‘யு’
கடந்த 2005&ம் ஆண்டு தனுஷ் நடித்த ‘அது ஒரு கனா காலம்’ படத்தை இயக்கிய பாலு மகேந்திரா, 8 ஆண்டுகளுக்கு பிறகு ‘தலைமுறைகள்’ என்ற படத்தை இயக்கி இருக்கிறார். படத்தை சசிகுமார் தயாரித்து, ஹீரோவாக நடித்திருக்கிறார். முக்கிய வேடத்தில் பாலு மகேந்திரா நடித்துள்ளார். விரைவில் வெளியாக உள்ள இப்படத்துக்கு சென்சார் குழுவினர் ‘யு’ சான்றிதழ் வழங்கி உள்ளனர்.
திருமண ஸ்டண்ட்
தமிழ் படங்களை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க புதுவித டெக்னிக்கை இயக்குனர்கள் கையாள்கின்றனர். ஆர்யா, நயன்தாரா திருமணம் என்று சமீபத்தில் ஊரெல்லாம் போஸ்டர் ஒட்டி பரபரப்பு ஏற்படுத்தினர். ஆனால், இது ‘ராஜா ராணி’ பட விளம்பரத்துக்காக கையாளப்பட்ட யுக்தி. அதேபாணியை ‘நான்’ படத்தில் நடித்த இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி, தான் நடிக்கும் ‘சலீம்’ படத்துக்காக பின்பற்றி இருக்கிறார். விஜய் ஆண்டனி ஏற்கனவே திருமணம் ஆனவர். அவர் மீண்டும் திருமணம் செய்ய உள்ளதுபோல் திருமண பத்திரிகை ஒன்று இணைய தளங்களில் வலம் வருகிறது. ‘சலீம்’ படத்துக்காக இந்த ஸ்டண்ட் செய்திருக்கிறார்கள்.
மும்முனை போட்டி
டோலிவுட் சீனியர் நடிகைகள் த்ரிஷா, அனுஷ்கா, தமன்னா போன்றவர்கள் ஹீரோக்களுடன் ஜோடியாக நடிப்பதில் பெரிதாக ஆர்வம் காட்டாமல் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளையே தேர்வு செய்கின்றனர். எனவே, இப்போதைக்கு இளம் ஹீரோயின்களில் முன்னணி இடத்தை பிடிப்பதில் ஸ்ருதி ஹாசன், காஜல் அகர்வால், நித்யா மேனன் ஆகிய 3 ஹீரோயின்கள் மத்தியில்தான் மும்முனை போட்டி நடக்கிறதாம்.
பூஜா காந்தி
தமிழில் ‘கொக்கி’, ‘திருவண்ணாமலை’ மற்றும் சில கன்னட படங்களிலும் நடித்திருப்பவர் பூஜா காந்தி. இவர் திடீரென தயாரிப்பாளராகி இருக்கிறார். ‘அபிநேத்ரி’ என்ற படத்தை கன்னடத்தில் தயாரிப்பதுடன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கன்னடத்தில் முன்னணி நடிகையாக இருந்து தற்கொலை செய்துகொண்ட கல்பனாவின் வாழ்க்கையை படமாக தயாரிப்பதுடன் இதை தமிழிலும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்.

ஸ்பெஷல் ஷோ
அஜீத் நடித்த ‘மங்காத்தா‘ கடந்த 2011ம் ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி ரிலீஸ் ஆனது. அப்படம் வெளியாகி 2 வருடம் ஆனதையொட்டி தூத்துக்குடியில் உள்ள தியேட்டரில் இன்று காலை சிறப்பு காட்சி திரையிட்டனர். அஜீத் ரசிகர்களும், இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ரசிகர்களும் இணைந்து இதற்கான ஏற்பாடு செய்தனர். இதில் வசூலாகும் தொகையை பார்வையற்றோர் நல்வாழ்வுக்காக அளிக்கின்றனர்.
ஹீரோ வைத்த விருந்து
சிவகார்த்திகேயன்&மனைவி ஆர்த்தி திருமண ஆண்டு விழா கொண்டாடினார்கள். இதையொட்டி நண்பர் தனுஷுக்கு விருந்து அளித்தார் சிவ கார்த்திகேயன். இதுபற்றி தனது இணையதள பக்கத்தில் குறிப்பிட்டிருக்கும் தனுஷ் விருந்தை பாராட்டியதுடன், ஜோடிக்கு திருமண வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
ஆஸ்கருக்கு எஸ்.பி.பி. படம்
மும்பையில் உள்ள இந்தி திரைப்பட சம்மேளனம், தெலுங்கு திரைப்பட சங்கம் இணைந்து தணிகல பரணி இயக்கிய ‘மிதுனம் படத்தை ஆஸ்கார் போட்டிக்கான இந்திய படங்களின் பட்டியலில் இடம்பிடிக்க தேர்வு செய்துள்ளது. இதில் எஸ்.பி.பாலசுப்ரணியம், லட்சுமி நடித்துள்ளனர்.
ஐடி கதையில் ஆண்ட்ரியா
‘கற்றது தமிழ் படத்தையடுத்து ராம் இயக்கிய நடித்துள்ள ‘தங்க மீன்கள் திரைக்கு வந்துள்ளது. 2 வருடத்துக்கும் மேல் இப்படம் முடங்கி இருந்ததற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் இறுதியாக படம் ரிலீஸ் ஆனதில் மகிழ்ச்சியாக இருக்கிறார் ராம். அடுத்து என்ன படம் என்றதும், ‘தரமணி உருவாக்கப்போகிறேன் என்றார். ஐடி பீல்ட் பற்றிய மாறுபட்ட கதை அம்சத்துடன் உருவாகும் இதில் ஆண்ட்ரியா, புதுமுகம் வசந்த் ரவி நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

Comments
Post a Comment