நஸ்ரியாவை ஜெய் காதலித்து வருவதாக செய்திகள் வெளியானது. இது பற்றி ஜெய்!!!

29th of September 2013
சென்னை::நஸ்ரியாவை ஜெய் காதலித்து வருவதாக செய்திகள் வெளியானது. இது பற்றி ஜெய் கூறியதாவது: இந்த செய்தியில் உண்மை இல்லை என்று பலமுறை சொல்லிவிட்டேன். இருந்தும் தொடர்ந்து இதையே பேசுகிறார்கள். உடன் நடிக்கும் ஹீரோயின்களுடன் ப
 
ழகுவதை காதல் என்றா சொல்வது? நஸ்ரியாவை காதலிப்பதாக வரும் செய்திகளால், அவர்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்.
 
நான் நடித்துள்ள ‘ராஜா ராணி‘ நேற்று ரிலீஸ் ஆகியுள்ளது. அடுத்து ‘நவீன சரஸ்வதி சபதம்’, ‘திருமணம் எனும் நிக்காஹ்’, ‘வடகறி’, ‘தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும்’ படங்களில் நடிக்கிறேன். அஜீத்தை பார்த்து நானும் ரேஸ் கார் ஓட்டுவதற்கான லைசென்ஸ் வாங்கியுள்ளேன். ஜனவரி மாதம் இருங்காட்டுக்கோட்டையில் நடக்கும் கார் ரேஸில் கலந்துகொள்கிறேன்.

Comments