11th of September 2013
சென்னை::கோலிவுட் ஸ்வீட் ஸ்டால், காஜல் அகர்வால், 30 வயதை எட்டி விட்டாராம். இதனால், விரைவில், தொழில் அதிபர் ஒருவரை திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்றும், அதனால் தான், புதிதாக படங்களில் நடிப்பதை தவிர்க்கிறார் என்றும், வதந்திகள் ரெக்கை கட்டி பறக்கின்றன.
இதைக் கேள்விப்பட்டதிலிருந்து அம்மணி, கடும் அப்செட்டில் இருக்கிறார். ரொம்ப நாளுக்கு பின், இப்போது தான், கணிசமான படங்களை கைப்பற்றி, முன்னணி நடிகர்களின் படங்களில்நடிக்கிறேன். இந்த நேரம் பார்த்து, கல்யாணம், காதுகுத்து என, வதந்தியை பரப்புகிறார்களே. அவர்கள் மட்டும், என் கையில் கிடைத்தால், அப்போது இருக்குகச்சேரி
என, தன் அழகான பற்களை, நற நறவென கடிக்கிறார், காஜல், என்னையும், கொஞ்சம் சம்பாதிக்க விடுங்களேன் என, வயிற்றெரிச்சல் பார்ட்டிகளுக்கு, உருக்கமான வேண்டுகோளும் விடுத்துள்ளாராம், காஜல்.
Comments
Post a Comment