5th of September 2013
சென்னை::சல்மான்கான்-ஐஸ்வர்யாராய் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் இணையதளத்தில் இப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சல்மான்கான், ஐஸ் வர்யா ராய் ஜோடியாக ஒரு படத்தில் நடித்தனர். அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டது. ஐஸ்வர்யா மீது சல்மான் தீவிரமாக காதல் கொண்டிருந் தார். அவருக்காக சில ஹீரோக்களிடம் மோதலில் ஈடுபட்ட சம்பவம் நடந்துள்ளது. ஒரு கட்டத்தில் ஐஸ்வர்யாராய் சல்மானை விட்டு பிரிந்தார். அவருடன் ஜோடியாக நடிப்பதையும் நிறுத்திக்கொண்டார்.
அபிஷேக் பச்சனை மணந்துகொண்டு வாழ்க்கையில் செட்டிலானார்.இந்நிலையில் சமீபத் தில் இணைய தளங்களில் ஐஸ்வர்யாராய்-சல்மான் கான் அரைகுறை ஆடையுடன் நெருக்கமாக இருக்கும் பழைய புகைப்படங்கள் இப்போது வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒரே பெட்டில் ஐஸ்வர்யாவுடன் சல்மான் நெருக்கமாக பேசிக்கொண்டிருக்கும் காட்சியும், ஐஸ்வர்யா கழுத்தில் சல்மான் முத்தமிடுவதுபோன்ற ஸ்டில்களும் வெளியாகி உள்ளது. இதனால் ஐஸ்வர்யா வின் கணவரும் நடிகருமான அபிஷேக் பச்சன் அப்செட் ஆகிய¤ருப்பதாக பாலிவுட் வட்டாரம் தெரிவித்தது.
Comments
Post a Comment