கிருத்திகாவின் அடுத்த படம் ரெடி? : உதயநிதி தான் ஹீரோவாம்!!!

19th of September 2013
சென்னை::கிருத்திகா உதயநிதி டைரக்ட் செய்த ‘வணக்கம் சென்னை’ படத்தின் ட்ரெய்லருக்கே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்திருக்கிறது. அந்த சந்தோஷத்தோடு தனது அடுத்த படத்தின் டைரக்‌ஷன் வேலைகளில் மும்முரமாகி விட்டாராம் கிருத்திகா.

ஆமாம் அவர் அடுத்து டைரக்ட் செய்யப்போகும் படத்தில் அவரது கணவரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கப் போகிறாராம்.
‘வணக்கம் சென்னை’ படத்தில் ஹீரோவாக மிர்ச்சி சிவாவும், அவருக்கு ஜோடியாக ப்ரியா ஆனந்த்தும் நடித்துள்ளனர். மனைவியின் முதல் டைரக்‌ஷன் என்பதால் தனது கம்பெனியான ரெட் ஜெயன்ட் மூவீஸ் சார்பிலேயே தயாரித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

அனிருத் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தின் பாடல்கள் சமீபத்தில் ரிலீஸ் செய்யப்பட்டு அதுவும் கூட ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளன. ரிலீஸுக்கு தயார் நிலையில் உள்ள இப்படத்தை வருகிற அக்டோபர் 11 ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறது தயாரிப்பு டீம்.

இதற்கிடையே கிருத்திகா தனது கணவர் உதயநிதியை ஹீரோவாக வைத்து தனது அடுத்த படத்தை டைரக்ட் செய்யப் போகிறார் என்று புதிதாக செய்திகள் கிளம்பியிருக்கின்றன.

உதயநிதி ஏற்கனவே ‘இது கதிர்வேலன் காதல்’, ‘நண்பேன்டா’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்தப் படங்களுக்குப் பிறகு கிருத்திகாவின் டைரக்‌ஷனில் உதயநிதி நடிப்பார் எனத் தெரிகிறது.

ஏன் இப்பெல்லாம் உங்க தாத்தா எந்தப்படத்துக்கு டயலாக் எழுதுறதில்லை உதயநிதி சார்..?

Comments