பலாத்கார காட்சியில் நடிக்க தயங்கினேன்: நித்யா மேனன்!!!

2nd of September 2013
சென்னை::பலாத்கார காட்சியில் நடிக்க தயங்கினேன் என்றார் நித்யா மேனன். மலையாளத்தில் வெளியான 22 பிமேல் கோட்டயம் படம் தமிழில் 22 மாலினி பாளையங்கோட்டை என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. பலாத்கார கொடுமை பற்றிய கதையாக இது உருவாகிறது. இது பற்றி நித்யா மேனன் கூறியது:
 
ஸ்ரீபிரியா இப்படத்தில் நடிக்க என்னை அணுகியபோது ஏற்க தயங்கினேன். அந்த நேரத்தில் டெல்லி பலாத்கார சம்பவம் நடந்திருந்தது. நான் தயங்கியதற்கு காரணம் அந்த வேடத்தில் எந்தளவுக்கு என்னால் பொருந்த முடியும் என்ற சந்தேகம் இருந்தது. பிறகு நடிக்க முடிவு செய்தேன். பெண் இயக்குனர் இயக்கத்தில் நடிப்பது எனது தயக்கத்தை போக்கியது. பலாத்கார சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் இப்படத்தை பார்த்தால் நிச்சயம் அதுபோன்ற தகாத செயல்களில் ஈடுபடமாட்டார்கள். இந்த படம் வெளியானால் நிச்சயம் தவறு செய்ய நினைப்பவர்கள் மனதில் மாற்றத்தை கொண்டு வரும்.
 
இதுபோன்ற சம்பவங்களை பற்றி கேட்டறியும்போது ஏற்படும் மாற்றத்தைவிட அதை விஷுவலாக பார்க்கும்போது பெரிய பாதிப்பு இருக்கும். இந்த படத்திற்காக பலாத்கார காட்சி படமானபோது மும்பையிலும் சமீபத்தில் அதுபோல் ஒரு சம்பவம் நடந்தது அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.
 

Comments