14th of September 2013
சென்னை::தமிழ் திரையுலகில் ‘அமராவதி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் அஜீத். சினிமா பின்னணி இல்லாமல் முன்னணி நடிகராக உயர்ந்தவர். ‘காதல் கோட்டை’ படத்திற்குப் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. காதல் படங்களில் நடித்த வந்தவருக்கு ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த ‘தீனா’ படம் திருப்பு முனையாக அமைந்தது.
அடுத்து முருகதாஸ் இயக்கத்தில் ‘கஜினி’ படத்தில் நடிக்க அஜீத் முடிவு செய்திருந்தார். ஆனால் பின்னர் அவர் நடிக்காமல் சூர்யா நடித்தார். இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதேபோல் ‘நந்தா’, ‘காக்க காக்க’ படத்திலும் முதலில் அஜீத்துதான் நடிப்பதாக இருந்தது. ஆனால், அதிலும் சூர்யாவே நடித்தார். ‘நான் கடவுள்’ படத்திலும் அஜீத்துக்குப் பதிலாக ஆர்யா நடித்தார். இப்படி அஜீத் நடிக்க இருந்து மாற்று நடிகர்கள் நடித்த படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்று அப்படத்தின் நாயகர்களை உச்சத்திற்கும் கொண்டு சென்றது.
இதேபோல் தற்போது அஜீத் நடிக்க இருந்த படம் வேறு நடிகர் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. அந்தப்படம்தான் ‘கோ’. ஒளிப்பதிவாளராக இருந்த கே.வி. ஆனந்த் இயக்கிய படம். அவர் இந்த கதையை அஜீத்துக்காக உருவாக்கினாராம். அதன்பின் சூர்யாவிடம் சென்றதாம். அதன்பின் சிம்புவிடம் கைமாறி கடைசியாக ஜீவா நடித்தாராம்.

Comments
Post a Comment