4th of September 2013
சென்னை::விஷால் நடித்த 'திமிரு', 'சண்டைக்கோழி' போன்ற படங்கள் தமிழகத்தில் மட்டும் இன்றி ஆந்திராவிலும் பெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து, விஷாலை தெலுங்கு இயக்குநர்கள் நீண்ட நாட்களாக, நேரடி தெலுங்குப் படத்தில் நடிக்க அழைப்பு விடுத்தனர்.
தமிழில் பிஸியாக இருப்பதால், தனது படங்களை மட்டுமே தெலுங்கு சினிமாவுக்கு அனுப்பி வைத்துக்கொண்டிருந்த விஷால், தற்போது தானே நேரடியாக ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க முன்வந்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் மாதம் தொடங்கப்பட உள்ளது. இப்படத்தை பற்றிய தகவல்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
நேரடி தெலுங்குப் படம் குறித்து கூறிய விஷால், "நீண்ட நாட்களாக காத்திருப்பில் இருந்த இந்தத் திட்டம் தற்போது செயல்படத் துவங்கியுள்ளது. திரைப்படத்தின் பெயர் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. மேலும், எனது படங்கள் இதற்கு முன்பே தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி இருப்பதால் நான் இப்போது தெலுங்குப் படத்தில் நடிக்க இருப்பதைப் புதிதாகக் கருதவில்லை." என்று தெரிவித்தார்.

Comments
Post a Comment