நயன்தாராவும், ஆர்யாவும் காதலிப்பதாக தொடர்ந்து கிசுகிசுக்கள் நயன்தாராவை காதலிக்கவில்லை: ஆர்யா பேட்டி!!!
28th of September 2013
சென்னை::நயன்தாராவும், ஆர்யாவும் காதலிப்பதாக தொடர்ந்து கிசுகிசுக்கள் வருகின்றன. இருவரும் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஜோடியாக நடித்தனர். பின்னர் ராஜாராணி படத்திலும் இணைந்துள்ளனர். இப்படம் இன்று ரிலீசானது.
நயன்தாராவுடன் தொடர்புப்படுத்தும் கிசுகிசுக்களுக்கு பதில் அளித்து ஆர்யா அளித்த பேட்டி வருமாறு:-
நயன்தாராவுக்கும், எனக்கும் திருமணம் என அழைப்பிதல் வெளியிட்டதில் இருந்து எங்களை இணைத்து வதந்திகள் பரவி வருகின்றன.
ராஜா ராணி படத்தில் நாங்கள் கணவன்-மனைவியாக நடிக்கிறோம். எனவே படத்தை விளம்பரப்படுத்த அழைப்பிதழ் அச்சிட்டு வெளியிடுவது என முடிவு எடுக்கப்பட்டது. இது குறித்து நயன்தாராவிடம் பேசி அவரது அனுமதியும் பெறப்பட்டது.
இந்த திருமண அழைப்பிதழை நயன்தாராவுக்கு தெரியாமல் வெளியிட்டதாகவும், இதனால் அவர் கோபமாக இருக்கிறார் என்று வெளியான செய்திகளில் உண்மை இல்லை.
நயன்தாரா என்னுடன் நடித்த சக நடிகை. அந்த வகையில் நான் அவருடன் தொடர்பு வைத்துள்ளேன். எங்களுக்குள் நட்புதான் உள்ளது. அதை தாண்டி எந்த உறவும் இல்லை.
எனக்கு திருமணத்துக்கு வீட்டில் பெண் பார்க்கிறார்கள். அவர்கள் பார்க்கும் பெண் எனக்கு பிடித்தால் மட்டுமே திருமணம் செய்து கொள்வேன்.
பள்ளியில் படித்த போது ஒரு பெண்ணை காதலித்தேன். ஆறு வருடம் இந்த காதல் இருந்தது. படிப்பு முடிந்து வெளியே போனதும் அது மறந்து போய்விட்டது.
ராஜா ராணி படம் தமிழ் கலாசாரத்துக்கு எதிரானது என்பதில் உண்மை இல்லை. தமிழ் பண்பாட்டை அவமதிக்கும் காட்சிகள் எதுவும் கிடையாது. ஜாலியான காமெடி படமாக இருக்கும்.
இரு கதாநாயகர்களை உள்ளடக்கிய கதையம்சம் உள்ள படங்களில் நடிப்பதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. உள்ளம் கேட்குமே படத்தில் இருந்து இரண்டு ஹீரோ படங்களில் நடித்து வருகிறேன். திறமையான டைரக்டர் எடுப்பதாக இருந்தால் அது போன்ற படங்களில் தாராளமாக நடிக்கலாம். சரியான டைரக்டர் அமையாயாவிட்டால் படம் தோற்றுவிடும்.
அஜீத்துடன் ஆரம்பம் படத்தில் நடிக்கிறேன். அவருடன் நடித்தது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது.
பாலா எடுக்கும் புதிய படத்தில் இருந்து என்னை நீக்கி விட்டதாக வெளியான செய்திகளில் உண்மை இல்லை. அவர் என்னை அணுகவே இல்லை. ஏற்கனவே இரண்டு படங்களில் என்னை நடிக்க வைத்ததே பெரிய விஷயம்.
இவ்வாறு ஆர்யா கூறினார்.

Comments
Post a Comment