கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!

13th of September 2013
சென்னை::நான் குண்டாவா இருக்கேன்--நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ ஹீரோயின் காயத்ரி, சூர்யாவுடன் காரில் சென்றாராம். அப்போது, ‘உங்களுடன் ஜோடியாக நடிக்க வேண்டும்’ என்ற தனது ஆசையை வெளியிட்டிருக்கிறார். அதை கேட்டு சிரித்த சூர்யா, ‘நீ குண்டா இருக்கே. அதால ஜோடியா நடிக்க முடியாது’ என்று சொல்லிவிட்டாராம். ‘இப்படியா முகத்துல அடிச்ச மாதிரி சூர்யா சொன்னாரு’ என்று காயத்ரியிடம் கேட்டபோது,‘ஆமாங்க. ஆனா, அது கனவுல நடந்த விஷயம்’ என்றார். அந்த கனவு வந்ததில் இருந்து யாரை பார்த்தாலும் ‘நான் குண்டாவா இருக்கேன்’ என்று அப்பாவியாக கேட்கிறாராம்.

வேட்டி கட்டிய ராஐ£--விழாக்களில் பங்கேற்கும்போது வேட்டி கட்டி வருவதை வழக்கமாக கொண்டிருக்கிறார் தனுஷ். சமீபகாலமாக ஹீரோ விமலும் அதே பாணியில் விழாக்களுக்கு வேட்டி கட்டி வர தொடங்கி உள்ளார். ‘தேசிங்கு ராஜா’ வெற்றி தந்த சந்தோஷத்தில் அடுத்து ஆர்.நாகேந்திரன் டைரக்ஷனில் ‘நீயெல்லாம் நல்லா வருவடா’ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இவருடன் சமுத்திரகனியும் நடிக்கிறார்.

இன்னொரு அழகி--2012-ம் ஆண்டு நடந்த மிஸ் இந்தியா போட்டியில் வென்றவர் வன்யா மிஸ்ரா. இவர், சுரேஷ் கிருஷ்ணா இயக்கும் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாக உள்ளார். நண்பர் ஒருவர் வன்யாவை பற்றி சுரேஷ் கிருஷ்ணாவிடம் சொல்லியிருக்கிறார். உடனே அவரை வரவழைத்து மேக் அப் டெஸ்ட் எடுத்த இயக்குனர், ஓ.கே. சொன்னார். இப்போது ஹீரோயின் ரேஸில் ஓட தயாராகிவிட்டார் வன்யா.

மும்பையில் ரொமான்ஸ்--கோ’ படம் மூலம் கார்த்திகாவுடன் ஜோடி போட்ட ஜீவா அடுத்து ‘யான்’ படத்தில் கார்த்திகா தங்கை துளசியுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார். அவருடன் டூயட் பாட இப்போது மும்பைக்கு பறந்திருக்கிறார். ஜீவா - துளசி ரொமான்ஸ் சீன்களை படமாக்குகிறார் இயக்குனர் ரவி கே சந்திரன்.
 
தல'க்கு வழிவிடும் 'வாலு'-தீபாவளிக்கு தல அஜீத்தின் ‘ஆரம்பம்' படம் திரைக்கு வருகிறது. அதேநாளில் சிம்பு நடித்திருக்கும் ‘வாலு‘ படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. அஜீத்தின் தீவிர ரசிகரான சிம்பு தலயுடன் மோத இஷ்டமில்லாமல் ‘வாலு' ரிலீசை தள்ளி வைக்கும்படி தயாரிப்பாளரிடம் கேட்டுக்கொண்டாராம்.

நலம் விசாரித்த சாமி--‘பம்பாய்' பட ஜோடி அரவிந்த்சாமி, மனிஷாவை மறக்க முடியாது.  நடிப்பில் தொடங்கிய இவர்களது நட்பு இன்னும் போனில் தொடர்கிறது. கேன்சர் நோய்க்கு சிகிச்சை பெற்று மும்பை திரும்பிய மனிஷாவை சில நாட்களுக்கு முன் மும்பை சென்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் அரவிந்த்சாமி. அப்போது பழைய நினைவுகளை இருவரும் உருக்கமுடன் பகிர்ந்துகொண்டனர்.
ஷூட்டிங் வேகம்--தனுஷை வைத்து ‘3' படத்தை இயக்கிய ஐஸ்வர்யா தனுஷ், அடுத்து கவுதம் கார்த்திக் நடிக்கும் ‘வை ராஜா வை' படத்தை இயக்குகிறார். ஹீரோயின் பிரியா ஆனந்த். இப்படத்தின் ஷூட்டிங்கை வேகமாக நடத்தி வருகிறார் ஐஸ். ‘3' படத்துக்கு அனிரூத் இசை அமைத்தார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

புதுபடம் ஒத்துகிட்டேன்--சிம்புவுடனான காதலை ஒப்புக்கொண்ட ஹன்சிகாவுக்கு புதுபட வாய்ப்பு குறைந்துவிட்டது என்று வரும் தகவலை மறுத்திருக்கிறார். அடுத்து சுந்தர்.சி. இயக்கும் ‘அரண்மனை' படத்தில் நடிப்பதை குஷியோடு டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு ரூமருக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
 
வந்துட்டாருய்யா...‘காக்க காக்க படத்தில் வில்லனாக நடித்த ஜீவன், அடுத்து ‘திருட்டு பயலே, ‘நான் அவன் இல்லை ‘தோட்டா போன்ற படங்களில் நடித்தார். திடீரென்று அவர் காணாமல்போனார். 2 வருடத்துக்கு பிறகு மீண்டும் அவர் நடிக்க வந்திருக்கிறார். செல்வா இப்படத்தை இயக்குகிறார். ஜோடியாக கன்னட நடிகை சவுந்தர்யா அறிமுகமாகிறார்.
 
ஜப்பான் மோகம்சமீபகாலமாக கோலிவுட் ஹீரோக்களுக்கும், இயக்குனர்களுக்கும் ஜப்பான் மீது மோகம் ஏற்பட்டிருக்கிறதாம். தீயா வேலை செய்யணும் குமாரு ஷூட்டிங் ஜப்பானில் நடந்தது. அடுத்து விஜய் சேதுபதி நடிக்கும் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, சிம்பு நடிக்கும் வேட்டை மன்னன் ஷூட்டிங் ஜப்பானில் நடந்துள்ளது. மற்ற நாடுகளுக்கு சென்று ஷூட்டிங் நடத்துவதை காட்டிலும் ஜப்பானில் ஷூட்டிங் செலவு எகிறிவிடுகிறதாம். அதாவது 5 நாள் ஷூட்டிங் நடத்தினால் ரூ.60 லட்சம் வைக்க வேண்டுமாம். ஆனாலும் ஜப்பான் மோகத்தால் செலவுபற்றி கவலைப்படாமல் கோலிவுட்காரர்கள் பறக்கிறார்களாம்.
 
தீப்பந்தம் ஏந்திய ஹீரோசத்தான உணவு சாப்பிடுவதுபற்றிய விழிப்புணர்வு ஊர்வலம் சமீபத்தில் சென்னையில் நடந்தது. 700 பேர் பங்கேற்ற இதில் தீப்பந்தம் ஏந்தியபடி அருண் விஜய் நடந்து சென்றார். சத்தான உணவு சாப்பிட வேண்டும் என்ற விழிப்புணர்வுக்காக பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் நிறைய இளைஞர்களும் பங்கேற்றதை கண்ட அருண் விஜய் அவர்களுக்கு வாழ்த்து சொன்னாராம்.
 
ஆல்ப மோகம்படங்களுக்கு இசை அமைக்கும் அனிரூத் மற்றொரு புறம் தனி ஆல்பங்களுக்கும் இசை அமைப்பதில் ஆர்வம் காட்டுகிறார். வெஸ்டர்ன் இசை பாடகர் ஹனி சிங்குடன் இணைந்து வீடியோ ஆல்பம் உருவாக்க உள்ளார். தமிழ், இந்தி மற்றும் பஞ்சாபி மொழியில் உருவாகும் இந்த ஆல்பத் தின் ஷூட்டிங்கை லாஸ் ஏஞ்சல்ஸ் அல்லது துபாயில் நடத்த உள்ளனர்.

Comments