காஜல் அகர்வாலுக்கு திருமணம்?!!!

6th of September 2013
சென்னை::திருமண ஏற்பாடு நடப்பதால் படங்களை குறைத்து கொண்டாரா என்ற கேள்விக்கு பதில் அளித்தார் காஜல் அகர்வால்.‘துப்பாக்கி, ‘மாற்றான் போன்ற படங்களில் நடித்த காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடிக்கிறார். மார்க்கெட் சூடு பிடித்ததால் தனது சம்பளத்தை ஒன்றே கால் கோடி முதல் ஒன்றரை கோடி வரை உயர்த்தி கேட்டதாக கூறப்படுகிறது.
 
இதனால் தமிழில் கமலுடன் நடிக்க வந்த வாய்ப்பு தெலுங்கில் பவன் கல்யாண், ஜூனியர் என்டிஆர் போன்றவர்களுடனான வாய்ப்பு கைநழுவிப்போனது. தவிர நிறைய வாய்ப்புகளை அவர் ஏற்க மறுத்ததால் அவருக்கு திருமண ஏற்பாடு நடப்பதாகவும் திரையுலகில் தகவல் பரவியது.இதுபற்றி காஜல் அகர்வால் தாய் சுமன் கூறும்போது, ‘காஜல் தனது சம்பளத்தை ஏற்றவில்லை.
 
ஒன்றரை கோடி, ஒன்றேகால் கோடி சம்பளம் வேண்டும் என்று கேட்டதே இல்லை. தமிழில் 2 படங்களில் நடித்து வருகிறார். அவரிடம் கால்ஷீட் இல்லாததால்தான் புதிய படங்களை ஏற்கவில்லை. காஜலுக்கு திருமண ஏற்பாடு எதுவும் நடக்கவில்லை. விரைவில் 2 இந்தி படங்களில் நடிக்க உள்ளார் என்றார்.

Comments