தந்தையைப் போல் ஆடமுயன்று காயமடைந்த சுருதி ஹாசன்!!!

19th of September 2013
சென்னை::நடிப்பிலும், நடனத்திலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்பவர் கமலஹாசன் ஆவார். அவரது மகள் ஸ்ருதிஹாசனும் கமலைப் போலவே தன்னை எதிலும் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள நினைப்பவர். சென்ற வாரம் துபாயில் சினிமாத்துறையினருக்கான விருது வழங்கும் விழா ஒன்று நடைபெற்றது.

அதில் நடிகர் கமலஹாசன் படங்களில் இருந்து கலந்து எடுக்கப்பட்ட சில பாடல்களுக்கு ஸ்ருதிஹாசன் மேடையில் நடனமாடினார். அந்தப் பாடல்கள் சிலவற்றின் நடன அசைவுகள் வேகமாகவும், செய்வதற்குக் கடினமாகவும் இருந்தன. அவை அனைத்தையும் மேடையில் செய்து காட்டி ஸ்ருதிஹாசன் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினார். ஆனால், இதன் விளைவாக அவரது கால் முட்டி பாதிக்கப்பட்டதால் தற்போது ஓய்வெடுத்துக் கொண்டிருக்கின்றார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
tamil matrimony_INNER_468x60.gif

Comments