பொங்கல் ஜல்லிகட்டில் களமிறங்கும் விஜய்- அஜித்!!!

28th of September 2013
சென்னை::ரசிகர்களுக்கு சர்க்கரை பொங்கல் அளிக்க வருகிறார்கள் தல மற்றும் தளபதி.ரசிகர்களை பொறுத்தவரையில் வருகிற பொங்கல் அடிக் கரும்பாய் இனிக்கப் போகிறது.
 
ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பில் நேசன் இயக்கும் ஜில்லா படத்தில் விஜய், மோகன்லால், காஜல் அகர்வால் என வெற்றி கூட்டணிகளோடு படம் பொங்கலுக்கு வெளியாவதற்கு தயாராகி கொண்டிருக்கிறது.
 
தளபதியின் ஜில்லாவும், தலயின் வீரமும் திட்டமிட்டபடி பொங்கல் வெளியீடாக வந்து ரசிகர்களுக்கு விருந்து படைக்கவிருக்கிறது.
 
ஜில்லா படத்தைத் தயாரிக்கும் சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரியும், இளைய தளபதி விஜய்யும் இணைந்த திருப்பாச்சி படம் 2005 பொங்கல் தினத்தன்று வெளியாகி தான் சூப்பர் ஹிட்டானது என்ற சென்டிமென்ட் தான் ஜில்லாவை பொங்கலுக்கு கொண்டு வரவேண்டும் என்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
 
மொத்தத்தில் பொங்கலுக்கு அஜித்தும், விஜய்யும் இணைந்து கலக்க இருக்கிறார்கள்

Comments