மாமாவை கேட்டு பேட்டி கொடுக்கும் பரதேசி நடிகை!!!


24th of September 2013
சென்னை::அரவான், பரதேசி படங்களில் நடித்தவர் நடிகை தன்ஷிகா. யா யா படத்தின் பத்திரிகையாளர் ஷோவில் பங்கேற்ற தன்ஷிகாவிடம் பேட்டி எடுக்க சென்றபோது, தன்ஷிகா, ‘பேட்டி‌யா உங்களுக்கா கொடுக்க முடியாது. எதுவாக இருந்தாலும் என் மாமாவை கேட்டுத்தான் கொடுப்பேன்’, என்று தன் உதவியாளரை அழைத்து தன் மாமாவை கூப்பிடும் படி சொன்னார்.
 
அங்கே வந்த அவரது மாமா யார் என்று பார்த்தால், ஒருகாலத்தில் நடிகைகள் சிம்ரன், விந்தியா உள்ளிட்டோருக்கு அப்போது மானேஜராக இருந்த அருண் தான். தன்ஷிகா அருகில் வந்த அருண், தன்ஷிகாவை பற்றி நிறைய அவதூறு செய்திகள் எழுதுகிறீர்கள், உங்களுக்கெல்லாம் பேட்டியெல்லாம் கொடுக்க முடியாது என்று காட்டு கத்து கத்தினார்.

நடிகைகள் இன்னும் எத்தனை ஆண்டுகள் தான் மானேஜர்களின் கைபிள்ளையாக வலம் வருவார்களோ தெரியவில்லை...!!

Comments