முதல் படம் ரிலீசுக்கு முன்பு விபத்தில் பலியான இயக்குனர்: ஹீரோயின் நீலம்!!!


11th of September 2013
சென்னை::புதுமுகங்கள் அர்ஜூன் விஜயராகவன், ஜிப்ரான் செல்மான், மாடல் அழகி நீலம் நடித்துள்ள படம் ‘உன்னோடு ஒரு நாள்'. துரை கார்த்திகேயன் இயக்கி உள்ளார். இப்படம் இயக்கி முடித்த பிறகு மோட்டார் சைக்கிள் விபத்தில் மரணம் அடைந்தார் இயக்குனர். படத்தில் நடித்ததுபற்றி ஹீரோயின் நீலம் கூறும்போது,‘
 
இயக்குனர் துரை கார்த்திகேயன் திறமையானவர். இப்படத்தின் கதை கத்தி மேல் நடப்பது போன்றது. நண்பனின் மனைவியை தவறாக அடைய முயல்பவனைபற்றியது. இந்த கதையை எந்த பாணி யிலும் எடுக்கலாம். ஆனால் ஹாலிவுட் பாணி யில் காட்சிகளை இயக்குனர் அமைத்து விரசமே இல்லாமல் த்ரில்லாக இயக்கியது மறக்க முடியாது. அணுஅணுவாக ரசித்து படத்தை இயக்கியவர் துரை கார்த்திகேயன். அப்படம் ரிலீஸ் ஆகும் தருணத் தில் அவர் விபத்தில் மரணம் அடைந்தது கண்ணீரை வரவழைக்கிறது.
 
 பட தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் இயக்குனருக்கு அஞ்சலி கார்ட் போட்டிருப்பதுடன், ஹெல்மெட் அணிந்து டுவீலரை ஓட்டும்படி டைட்டில் கார்டும் போட்டிருக்கிறார் என்றார்.

Comments