மொராக்கோவில் படமாகும் ஜீவாவின் ‘யான்’!!!

28th of September 2013
சென்னை::ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் இயக்கத்தில் ஜீவா-துளசி நாயர் நடிக்கும் புதிய படம் ‘யான்’. இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். கடந்த சில மாதங்களாக இப்படம் குறித்த எந்த தகவலும் வெளியாகாத நிலையில், தற்போது இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை மொராக்கோவில் படமாக்கப் போவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்திய சினிமா நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தால் ‘யான்’ படத்தின் வெளிநாட்டு படப்பிடிப்பு தள்ளிப்போனது. இந்நிலையில் அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கும் படப்பிடிப்பிற்காக இப்படக்குழு மொராக்கோவிற்கு பயணமாகவிருக்கிறது.

இங்கு படம் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கவிருக்கின்றனர். இதைத் தொடர்ந்து படத்தின் பெரும்பாலான காட்சிகளை வெளிநாட்டிலேயே படமாக்கவுள்ளனர். இன்னும் 40 நாட்களே மீதம் உள்ள நிலையில், இப்படக்குழு முழுவீச்சில் களமிறங்கியுள்ளது.

இப்படத்திற்காக ஹாரிஸ் ஜெயராஜ் 5 பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். இப்பாடல்களை வரும் அக்டோபர் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

Comments