ஆவி படம் - அனிருத்துக்கு பதில் தமன்!!!

6th of September 2013
சென்னை::ராகவா லாரன்ஸ் இயக்கிவரும் முனி 3 - கங்கா படத்தில் அனிருத்துக்குப் பதில் தமன் இசையமைக்கிறார்.
 
த ‌ரிபெல் படத்தின் தோல்விக்குப் பிறகு ஒரு வெற்றியை தந்தேயாக வேண்டிய கட்டாயம் லாரன்சுக்கு. அதற்கு அவர் தேர்வு செய்திருப்பது முனி 3 - கங்கா. முனி மற்றும் காஞ்சனாவுக்குப் பிறகு அவற்றின் தொடர்ச்சியாக வரும் படம். அந்தப் படங்களைப் போலவே ஆவிதான் மேட்டர்.
 
தாப்ஸி கங்காவின் கதாநாயகி. ஆவணப்பட இயக்குனராக வருகிறார். அஞ்சலிக்கு சின்ன வேடம். காஞ்சனாவைப் போலவே காமெடி பின்னணியில் இந்த ஆவி கதையை லாரன்ஸ் சொல்கிறார்.
 
இந்தப் படத்துக்கு முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டவர் இசையமைப்பாளர் அனிருத். சில வாரங்கள் முன்பு, டைட் ஷெட்யூல்ட், முனி 3-யில் இசையமைக்க நேரமில்லை, அந்தப் படத்திலிருந்து விலகுகிறேன் என அறிவித்தார் அனிருத். தற்போது அவருக்கு பதில் இசையமைப்பாளர் தமன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்

Comments