19th of September 2013
சென்னை::தற்போது தமிழ் சினிமாவில் அதிக படங்களை வைத்திருக்கும் இரண்டு நடிகைகள் லட்சுமிமேனன், நஸ்ரியா நசீம் ஆகிய இருவரும்தான். இதில் நஸ்ரியா முழு நேரத்தையும் நடிப்புக்காகவே செலவிட்டு வருகிறார். ஆனால், லட்சுமிமேனனோ இன்னமும் படிப்பையும் தொடர்ந்து வருகிறார். கும்கி, சுந்தரபாண்டியன் படங்களில் நடித்தபோது 10வது படித்து பாஸ் பண்ணியவர், இப்போது ப்ளஸ் ஒன் படிப்பையும் தொடர்ந்திருக்கிறார்.
ஆனால் இந்த நேரத்தில் அரை டஜன் படங்களுக்கும் மேல் கைவசம் இருப்பதால், படிப்பையும பாதிக்காத அளவுக்கு கால்சீட் கொடுக்கிறாராம். அதாவது ஒரு படத்துக்கு அதிகபட்சம் தனக்கு 10 முதல் 15 நாட்கள் வரைதான் படப்பிடிப்பு இருக்கும் என்பதால், அதற்கேற்ப கால்சீட் கொடுத்து நடித்து விட்டு கேரளத்துக்கு ஓடிச்சென்று விடுகிறார். ஆனால், ஒருவேளை சொன்னபடி குறித்த நாளில் படப்பிடிப்பை நடத்தவில்லை என்றால், பள்ளிக்கூடம் இல்லாத நாட்களில்தான் கால்சீட் தருவேன் என்று முன்பே கட் அண்ட் ரைட்டாக சொல்லி விடுகிறார் லட்சுமிமேனன். அப்படி ஏதாவது கம்பெனிகள் சிக்கிக்கொண்டால், வாரம் இரண்டு நாள் வீதம் கால்சீட் கொடுத்து நடித்துக்கொடுக்கிறார்.
தற்போது அவரது மார்க்கெட் சீராக இருப்பதோடு, பட்ஜெட்டுக்குள் அடங்கும் நடிகை என்பதால் லட்சுமிமேனனுக்கேற்ப வளைந்து கொடுத்துச்செல்லவும் தயாராக இருக்கிறார்கள் படாதிபதிகள்.

Comments
Post a Comment