18th of September 2013
சென்னை::கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் விமல்-சிவகார்த்திகேயன் குழுவுடன் சேர்ந்து நடித்தவர் பிந்துமாதவி. அதையடுத்து சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நட்புக்காக ஒரு டீச்சர் வேடத்தில்தான் நடித்திருந்தார். ஆனால், அதற்குள் அவர்களை இணைத்து காதல் கல்யாணம் என்று கண்டபடி செய்திகள் வெளியாகி பிந்துமாதவியை டென்சன் பண்ணி விட்டன.
அதனால், ‘கழுகு படத்தில் இருந்து இதுவரை எந்த பிரச்னையும் இல்லாமல் இருந்தேன். இப்போது முதன்முறையாக ஒரு கிசுகிசு வந்தது. அதுவும் ஒரு திருமணமான நடிகருடன் இணைத்து வெளியாகி என்னை மட்டுமின்றி எனது குடும்பத்தையும் அதிர்ச்சியடைய செய்து விட்டனர்’ என்று புலம்பித்தள்ளுகிறார் பிந்துமாதவி.
அப்படியென்றால் இனி சிவகார்த்திகேயனுடன் நடிக்க மாட்டீர்களா? என்று கேட்டால், ‘‘நான் ஒரு நடிகை. எனக்கு பிடித்தமான கதைகள் வந்தால் எந்த நடிகருடன் வேண்டுமானாலும் நடிப்பேன். மேலும், தேசிங்குராஜாவுக்கு பிறகு எனது மார்க்கெட் உயர்ந்திருக்கிறது. அதனால்தான், காய்க்கிற மரம் கல்லெறி படுகிறேன். சினிமாவில் இந்த மாதிரி கிசுகிசுக்களையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு சம்பந்தப்பட்ட நடிகர்களுடன் நடிப்பதை தவிர்த்தால் பிழைப்பு நடத்த முடியாது,’’ என்கிறார் பிந்துமாதவி.

Comments
Post a Comment