மீண்டும் ஷங்கருடன் கைகோர்க்க ரஜினி திட்டம்!!!

10th of September 2013
சென்னை::சிவாஜி, எந்திரன் என இரண்டு படங்கள் ஷங்கர் இயக்கத்தில் நடித்த ரஜினி, அடுத்ததாக ஆரம்பித்த புதுப்படத்தின் போது திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. பிறகு அதில் இருந்து மீண்டு வந்தவர் தற்போது கோச்சடையான் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

கிராபிக்ஸ் காட்சிகள் நிறைந்த இப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதற்கிடையில் ரஜினி தனது அடுத்தப் படத்தில் ஷங்கருடன் மீண்டும் இணைய முடிவு செய்துள்ளார். ரஜினியின் அடுத்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. ஆனால் இயக்குநர் யார்?, என்பதை ரஜினி தான் முடிவு செய்தாக வேண்டும்.

பல இயக்குநர்களை பரிசீலித்த ரஜினி, இறுதியில் ஷங்கரையே மீண்டும் தேர்வு செய்துள்ளாரா. தற்போது விக்ரமை வைத்து ஐ படத்தை இயக்கிக்கொண்டிருக்கும் ஷங்கர், அப்படம் முடிந்தப் பிறகு ரஜினி படத்திற்கான வேலைகளில் இறங்குவாராம்.

Comments