விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடித்த ‘ஆரம்பம்’ தீபாவளிக்கு வெளியாவது உறுதியாகிவிட்ட நிலையில், ‘வீரம்’ படத்தை பொங்கலுக்கு வெளியியிட மும்முரமாக இயங்கி வருகிறார்!!!

10th of September 2013
சென்னை::விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடித்த ‘ஆரம்பம்’ தீபாவளிக்கு வெளியாவது உறுதியாகிவிட்ட நிலையில், ‘வீரம்’ படத்தை பொங்கலுக்கு வெளியியிட மும்முரமாக இயங்கி வருகிறார் அஜீத். இப்படத்தை சிறுத்தை சிவா’ இயக்கி வருகிறார்.
சமீபத்தில் ‘வீரம்’ படத்துக்காக ஆந்திராவில் ரெயிலில் வைத்து ஒரு பிரம்மாண்டமான சண்டைக் காட்சியை படமாக்கியிருக்கிறார் சிவா. இந்த சண்டைக்காட்சியை பிரத்யேகமாக அஜீத்துக்கு மட்டும் போட்டுக் காண்பித்தாராம் சிவா.

அந்த காட்சிகளை பார்த்த அஜீத் மிரண்டு போய்விட்டாராம். சிவாவை கட்டிப்பிடித்து எல்லோமே வித்தியாசமாக இருக்கு. என்னோட அடுத்த படத்துக்கும் நீங்கதான் டைரக்டர் என சொன்னாராம். இதனால் சிவா ரொம்பவும் சந்தோஷத்தில் உள்ளாராம்.

வீரம்’ படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். மேலும், விதார்த் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் பாரதி ரெட்டி பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.

Comments