7th of September 2013
சென்னை::அறிமுக நடிகையில் ஆரம்பித்து லைம்லைட்டில் இருக்கும் அத்தனை நடிகைகளும் அச்சரம் பிசகாமல் சொல்லும் ஒரே விஷயம் எப்படியாவது ரஜினி, கமலுடன் நடிச்சிடணும் என்பதுதான்.
எந்த நடிகை பேட்டியளித்தாலும் இந்த பதில் பெரும்பாலும் மாறுவதில்லை.
அந்த பதில் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருகிறது.
ரஜினி, கமலுக்குப் பதிலாக விஜய், அஜித்தை சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.
அமலாபாலும் அப்படி ஒரு ஆசையில்தான் இருக்கிறார். ரஜினி படத்தில் அவருக்கு ஜோடியாக நடிச்சிடணும் . சான்ஸ் கிடைச்சா சம்பளமே தேவையில்லை என்று ஆரம்பத்தில் சொல்லி வந்தார்.
தலைவா’வுடன் நடிச்சிட்டேன். இனி ‘தல’யுடன் நடிச்சா போதும். தமிழ் சினிமாவில் நிரந்தரமா ஒரு நல்ல பெயர் கிடைத்துவிடும் என்ற கணிப்பில் இருக்கிறார் அமலாபால்.
அஜித்துக்கு ஜோடியாக நடிக்க என்ன செய்யலாம் என்ற தீவிர யோசனையில் இருக்கிறார் அமலா.
Comments
Post a Comment