லாரன்ஸ் படத்திலிருந்து இசை அமைப்பாளர் அனிரூத் திடீர் விலகல்!!!

5th of September 2013
சென்னை::லாரன்ஸ் படத்திலிருந்து இசை அமைப்பாளர் அனிரூத் திடீரென்று விலகினார். முனி படத்தின் இரண் டாம் பாகமாக காஞ்சனா படத்தை இயக்கினார் லாரன்ஸ். இதன் மூன்றாம் பாகமாக முனி 3 உருவாகி வருகிறது. லாரன்ஸ் இயக்கி நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக டாப்ஸி நடிக்கிறார். இதன் பெரும்பகுதி ஷூட்டிங் முடிந்திருக்கிறது. இசை அமைப்பாளராக அனிரூத் ஒப்பந்தம் ஆனார். தொடக்கத்திலிருந்தே அனிரூத் கால்ஷீட் குளறுபடி செய்தாராம். இதனால் இசை பணி தள்ளிப்போய்க்கொண்டிருந்தது. இந்நிலையில் இப்படத்திலிருந்து விலகுவதாக அனிரூத் அறிவித்திருக்கிறார். முனி 3 படத்துக்கு என்னால் இசை அமைக்க நேரம் ஒதுக்க முடியவில்லை. ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களில் பிஸியாக இருப்பதே இதற்கு காரணம் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

இப்போது தமனை இசை அமைப்பாளராக ஒப்பந்தம் செய்திருக்கிறார் லாரன்ஸ். இதையடுத்து படத்தின் இசை பணிகள் முழுவேகத்தில் தொடங்கி இருக்கிறது. இது பற்றி தமன் கூறும்போது, முனி 2 படத்துக்கு லாரன்ஸுடன் பணியாற்றினேன். எங்களுக்குள் நல்ல புரிதல் இருந்தது. முனி 3 படம் சர்வதேச தரத்துக்கு உருவாகிக்கொண்டிருக்கிறது. இதன் பாடல் பதிவு தொடங்கிவிட்டது. திகில் படத்துக்கு இசை அமைப்பது சவாலான விஷயம். வழக்கமான படங்களுக்கு அமைக்கும் இசையை விட இதில் திறமையை வெளிப்படுத்த கூடுதல் வாய்ப்பு  கிடைக்கும் என்றார்.

Comments