4th of September 2013
சென்னை::வெயில்' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ் குமார். இவர் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் அக்கா மகன்.
ஜி.வி.பிரகாஷ் இதுவரை 25 திரைப்படங்கள் வரை இசையமைத்துள்ளார். அண்மையில் இந்தி படம் ஒன்றிலும் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இவர் தற்போது ஹாலிவுட் படத்திற்கும் இசையமைக்க உள்ளாராம். இதனை அவரே டுவிட்டர், ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து ஜி.வி.பிரகாஷ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, விரைவில் ஒரு ஹாலிவுட் படத்திற்கு இசையமைக்க போகிறேன். இதுகுறித்த அறிவிப்பை சம்பந்தப்பட்ட பட நிறுவனமே விரைவில் அறிவிக்கும். அதுவரைக்கும் பொறுத்திருங்கள் என்று கூறியிருக்கிறார்.
ஜி.வி.பிரகாஷின் மாமாவான ஏ.ஆர்.ரஹ்மான் ஹாலிவுட்டில் முத்திரை பதித்ததோடு மட்டுமல்லாமல் இரண்டு ஆஸ்கார் விருதுகளை தனதாக்கினார். அதுபோல், ஜி.வி.பிரகாஷும் ஹாலிவுட்டில் வெற்றி பெறுவாரா? என்பதுதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

Comments
Post a Comment