சொந்தப்படம் எடுக்கிறதைத் தவிர எனக்கு வேற வழி தெரியல…” : நடிகர் ஷாம் புலம்பல்!!!

19th of September 2013
சென்னை::12பி’ படத்தின் மூலம் தமிழில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் ஷாம்.தொடர்ந்து லேசா லேசா, உள்ளம் கேட்குமே, இயற்கை என வெரைட்டியான படங்களில் நடித்திருந்தாலும் இப்போதும் அவர் போராடிக் கொண்டிருக்கிற ஹீரோக்கள் லிஸ்ட்டில் தான் இருக்கிறார்.
 
ஒரு கட்டத்தில் தனக்கு பிடித்தமான கதைகளை வைத்து எந்த தயாரிப்பாளரும் படம் தயாரிக்க முன்வராத நிலையில் தானே சொந்தமாக ஒரு புரொடக்‌ஷன் கம்பெனியை ஆரம்பித்து ’6′ என்ற படத்தை தனது சகோதரருடன் இணைந்து தயாரித்திருக்கிறார்.
 
நாளை ரிலீஸாக உள்ள இந்தப்படத்தைப் பற்றி நேற்று மனம் திறந்து பேசிய ஷாம் “சினிமா பேக்ரவுண்ட் இல்லாததால நான் ஹீரோவாக ஜெயிக்க கஷ்டப்பட வேண்டியிருக்கு, எனக்குன்னு சினிமாவுல ஹெல்ப் பண்ண யாருமே இல்ல, என்ன நானே தூக்கி நிறுத்திக்கிட்டாத் தான் உண்டு என்று புலம்பித் தள்ளி விட்டார் ஷாம்.
 
இதோ அவரது புலம்பலின் மிச்சம் :
2001-ஆம் வருஷம் என்னோட 12பி படம் ரிலீஸ் ஆனதை வெச்சி பார்க்கும் போது நான் சினிமா பீல்டுக்குள்ள வந்து 12 வருஷமாயிடுச்சி.
இந்த இடைப்பட்ட காலங்கள்ல எத்தனையோ படங்கள் நான் பண்ணியிருந்தாலும் எனக்குன்னு நல்ல கதைகள் கொண்ட படங்கள் அமையல.

Comments