ஜில்லா’வில் எதுவுமே புதுசா இருக்காது : விஜய் ரசிகர்களுக்கு ‘ஷாக்’ கொடுக்கும் டைரக்டர் நேசன்!!!

19th of September 2013
சென்னை::தலைவா’ கொடுத்த எச்சரிக்கை மணியில் ரொம்பவே உஷாராக திரைக்கதையை அமைத்திருக்கிறார் ‘ஜில்லா’ படத்தின் டைரக்டர் நேசன். அதனால் தான் இன்டெர்நெட்டுகளில் வரும் ‘ஜில்லா’ படத்தின் கதைகளை கட்டுக்கதைகள் என்று அவற்றை திட்டவட்டமாக மறுக்கும் அவர் அதில் எதுவுமே உண்மையில்லை என்கிறார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது :

வேலாயுதம்’ படத்தின் சூட்டிங் சுமார் ஒன்றரை வருஷம் நடந்துச்சு. அப்போதான் விஜய்சார்கிட்ட சார் உங்களுக்கு என்கிட்ட ரெண்டு கதைகள் இருக்கு கேட்கிறீங்களா..?ன்னு கேட்டேன். அதுல அவர் டிக் பண்ணின கதை தான் இந்த ‘ஜில்லா’ படத்தோட கதை.

ஜில்லா எப்படிப்பட்ட கதைன்னு இப்போதைக்கு என்னால சொல்ல முடியாது. அதே நேரத்துல இந்தப்படத்தோட கதைன்னு இன்டர்நெட்டுல வர்ற கதைகள் எதுவுமே உண்மை இல்லை. அந்த கதைகளை விட ‘ஜில்லா’ இரண்டு மடங்கு ஸ்ட்ராங்கா இருக்கும்.

தலைவா’ படத்துக்குப்புறம் ரிலீஸாகிறதுனால இந்தப்படத்துக்கு அவரோட ரசிகர்கள்கிட்ட பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அதை கம்ப்ளிட் பண்ற மாதிரி கலர்புல் சாங்ஸ், பிரம்மாண்டமான ஸ்டண்ட் சீன்கள், சென்டிமெண்ட்ஸ்னு படம் கலர்புல் கமர்ஷியல் படமா இருக்கும்.
என்றார் நேசன்.

மொத்தத்துல ‘ஜில்லா’ படத்துல புதுசா எதுவுமே இருக்காது, அதானே..?

Comments