8th of September 2013
சென்னை::கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘அனேகன்’ படத்தின் நாயகி அமிரா. மும்பையைச் சேர்ந்த இவர் பாலிவுட்டில் ‘இஸ்க்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலரை பார்த்துதான் கே.வி.ஆனந்த், அமிராவை இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார்.
இதுகுறித்து அமிரா கூறும்போது, இஸ்க் படத்தின் டிரைலரை பார்த்துதான் கே.வி.ஆனந்த் என்னை இப்படத்தில் நடிக்க அழைத்தார். போட்டோ செஷனில் திருப்தியடைந்ததும், கதையின் சுருக்கத்தை கூறினார். அது பிடித்துப்போனதால் உடனே நடிக்க ஒப்புக் கொண்டேன்.
நான் நடிக்க ஒத்துக்கொண்டபோது எனக்கு ஜோடியாக தனுஷ்தான் நடிக்கிறார் என்பது எனக்கு தெரியாது. தேசிய விருது பெற்ற நடிகருடன் நடிப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரம் பற்றி விரிவாக சொல்ல முடியாது. என்னுடைய கதாபாத்திரம் காதல் கதையின் பல தோற்றங்களை விவரிப்பதாக இருக்கும். இதற்காக இயக்குனர் என்னை 80 மற்றும் 90-களில் வெளிவந்த படங்களை பார்த்து, என்னுடைய கதாபாத்திரத்தை மெருகேற்ற சொல்லியிருக்கிறார்.
இப்படத்தை ஏ.ஜி.எஸ். புரொடக்ஷன் தயாரிக்கிறது. தனுஷ், அமிராவுடன் இணைந்து கார்த்திக், அதுல் குல்கர்னி, ஆஷிஷ் வித்யார்த்தி மற்றும் ஜெகன் ஆகியோரும் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

Comments
Post a Comment