பாலுமகேந்திராவின் தலைமுறைகள் எந்தவித விளம்பரமும், ஆர்ப்பாட்டமும் இல்லாமல் நிறைவடைந்தது!!!

17th of September 2013
சென்னை::இயக்குனரும், நடிகரும், தயாரிப்பாளருமான சசிக்குமார், பாலுமகேந்திரா இயக்கத்தில் ’தலைமுறைகள்’ என்ற படத்தை தயாரித்திருக்கிறார். இப்படம் தாத்தாவுக்கும், பேரனுக்கும் இடையிலான உறவுகளை அழகாக சித்தரிக்கும் படமாம். இந்தப் படத்தில் தாத்தாவாக பாலுமகேந்திராவும், பேரனாக சசிக்குமாரும் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு பாலுமகேந்திராவின் ஆஸ்தான இசை அமைப்பாளரான இளையராஜா இசை அமைத்திருக்கிறார். படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் முடிந்து விரைவில் ரிலீசாகவுள்ள தலைமுறைகள்’ படத்திற்கு தணிக்கைக் குழுவினர் ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். 
 
பாலுமகேந்திரா எந்தவித விளம்பரமும், ஆர்ப்பாட்டமும் இல்லாமல் தலைமுறைகள் என்ற படத்தை டைரக்ட் செய்துள்ளார். டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் 75 லட்ச ரூபாய்க்குள் ஒரு நல்ல படத்தை எடுக்க முடியும் என்று நிரூபித்து காட்டுவதற்காக இந்தப் படத்தை அவர் உருவாக்கி வருகிறார்.

சமீபத்தில் இதன் பின்னணி இசை சேர்ப்பு பணிகளை இளையராஜா முடித்திருந்தார். அதை போட்டுப் பார்த்துவிட்டு அசந்துபோய்விட்டாராம் பாலுமகேந்திரா. இதற்காக தயாரிப்பாளர் சசிகுமாரையும் அழைத்துக் கொண்டு பிரசாத் ஸ்டூடியோவுக்கு சென்று இளையராஜாவை சந்தித்து தனது வாழ்த்தையும், நன்றியையும் தெரிவித்துவிட்டு வந்திருக்கிறார். தலைமுறைகள் பொங்கல் ரிலீஸ் என்பது பாலுமகேந்திரா வட்டாரத் தகவல். தலைமுறைகள் விருதுகளை குவிப்பதோடு, கமர்ஷியலாகவும் வெற்றி பெறும் என்கிறார்கள் படத்தை பார்த்த டெக்னீஷியன்கள்..

Comments