சந்தானமும்- சிவகார்த்திகேயனும் ஏன் சேர்ந்து நடிப்பதில்லை?!!!

27th of September 2013
சென்னை::மிழ்சினிமாவில் இளம் ஹீரோக்களின் பர்ஸ்ட் சாய்ஸாக இருக்கும் சந்தானம் சிவகார்த்திகேயனுடம் மட்டும் ஏன் இன்னும் சேர்ந்து நடிக்கவில்லை?
 
இந்த கேள்வியும், குழப்பமும் எல்லோருக்கும் இருக்கும்.
மேற்படி இருவருமே விஜய் டி.வி.யில் காமெடி ரியாலிட்டி ஷோக்களை செய்து விட்டு அதன்மூலம் சினிமாவுக்குள் நுழைந்தவர்கள் தான். ஆனால், ஏனோ இரண்டு பேருக்கும் இப்போது வரை எந்த வகையிலும் சுமூகமான உறவு இல்லை.
 
கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தின் சக்சஸ் மீட்டில் கூட சிவகார்த்திகேயனிடம் இதுபற்றி கேட்டபோது “ சந்தானத்துடன் சேர்ந்து நடிக்க இன்னும் சான்ஸ் எதுவும் கிடைக்கவில்லை, அப்படி கிடைத்தான் கண்டிப்பாக நடிப்பேன்” என்று சிரித்துக் கொண்டே தான் சொன்னாரே தவிர சந்தானத்துடன் அவர் சேர்ந்து நடிக்கும் படம் தான் இதுவரை எதுவுமில்லை.
ஆனால் சிவகார்த்திகேயன் ரெடியாக இருந்தாலும் சந்தானம் அவருடன் சேர்ந்து நடிக்க தயாராக இல்லை என்பது தான் உண்மை.
 
சமீபத்தில் ரிலீஸான ‘யா யா’ படத்தில் முதலில் சிவாதான் ஹீரோவாக நடிப்பதாக இருந்தது. அவரிடம் பேசி அட்வான்ஸும் கூட கொடுத்து விட்டார்கள். ஆனால் ‘அவன் ஹீரோன்னா… நான் நடிக்க மாட்டேன்’ என்று சந்தானம் கண்டிஷனாக சொல்லி விட்டாராம். இதனால் வேறு வழியின்றி சிவகார்த்திகேயனைத் தூக்கிவிட்டு ‘மிர்ச்சி’ சிவாவை நடிக்க வைத்திருக்கிறார்கள்.
 
அடுத்து ‘ராஜா ராணி’ படத்திலும் இதே கூத்து தான். அந்தப்படத்திலும் ஜெய் கேரக்டரில் முதலில் கமிட்டானவர் சிவகார்த்திகேயன் தான். வழக்கம் போல அங்கேயும் சந்தானம் முரண்டு பிடிக்க, சிவகார்த்திகேயனை தூக்கி விட்டு ஜெய்யை நடிக்க வைத்தாராம் டைரக்டர் அட்லீ.
இப்படி சிவகார்த்திகேயன் மீது சந்தானம் உச்சகட்ட வெறுப்பில் இருப்பது ஏன்?
விசாரித்தால் விஷயம் என்னவோ கடுகளவு சமாச்சாரம் தான்.
அதாவது இரண்டு பேர்களுமே விஜய் டிவியில் காமெடிப் பண்ணித்தான் சினிமாவுக்குள் வந்தார்கள். அப்படி இருக்கும் போது சிவகார்த்திகேயனை மட்டும் ஹீரோவாக நடிக்கிறாரே..? நாம் வெறும் காமெடியனாக மட்டும் இருக்கிறோமே..? என்ற மன வெறுப்பு தான்
சந்தானம் சிவகார்த்திகேயனுடன் நடிக்காததன் மர்மமாம்.
என்ன பண்றது யார் யாருக்கு எதுன்னு எழுதி வெச்சிருக்கோ… அதுபடிதானே நடக்கும்? சந்தானம் சார்…

Comments