12th of September 2013
சென்னை::நான் நடிகையாவதை அப்பா ரஜினி விரும்பவில்லை என்றார் மகள் சவுந்தர்யா. ரஜினியின் இளையமகள் சவுந்தர்யா மனம் திறந்து பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:
சிறுவயதிலிருந்தே எனக்கு அனிமேஷன், கார்ட்டூன் என்றால் பிடிக்கும். கிராபிக்ஸ் பட்டப்படிப்பு முடித்த பிறகு எனக்கு ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு வந்தது. அப்பாவை பொறுத்தவரை கேமரா முன் நடிகையாவதைவிட கேமராவுக்கு பின்னால் டெக்னீஷியனாக பணியாற்றுவதையே விரும்பினார். இது பற்றி வெளிப்படையாகவே என்னிடம் தெரிவித்தார்.
இதையடுத்து நான் விரும்பிய அனிமேஷன் துறையில் படம் இயக்க முடிவு செய்தேன். ‘பார்ன் வித் சில்வர் ஸ்பூன்Õ என்பார்களே அப்படித்தான் பணக்காரவீட்டு குழந்தையாக நான் பிறந்தேன். 3 ஷிப்ட் வேலை செய்தாலும் சிறுவயதில் எங்களை மகிழ்விக்க அப்பா, அம்மா தவறியதில்லை. டிஸ்னிலேன்ட், யூனிவர்சல் ஸ்டுடியோ போக வேண்டும் என்று ஆசைப்பட்டால் உடனே அழைத்துச் செல்வார்கள். 6 வருடத்துக்கு முன் ‘சுல்தான்Õ படத்தை தொடங்கினேன். பிறகு கைவிட்டேன். ‘
கோச்சடையான்Õ படத்துக்கும் சுல்தானுக்கும் சம்பந்தம் இல்லை. இதுவொரு கார்ட்டூன் படமல்ல. எல்லா காட்சிகளிலும் அப்பாவே நடிக்க அதை மோஷன் கேப்சர் முறையில் 3டி வடிவில் படமாக்கி இருக்கிறேன். என் வாழ்வில் நான் துன்பம் அடைந்த நேரம் என்றால் அது என் தந்தை உடல் நலமில்லாமல்போன தருணம்தான். அந்த நேரத்தில் எல்லாவற்றையும் மறந்துவிட்டு அப்பாவுடனே இருந்தேன். இவ்வாறு சவுந்தர்யா கூறினார்.
Comments
Post a Comment