கேரவன் வசதி கேட்டு வருகிறாராம் லட்சுமிமேனன்!!!

11th of September 2013
சென்னை::கும்கி, சுந்தர பாண்டியன் படங்களில் நடித்தபோது ரொம்ப சாதாரண நடிகையாகத்தான் இருந்தார் லட்சுமிமேனன். படப்பிடிப்பு தளங்களில் ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகள் அமரும் இடங்களில்கூட அமர்ந்து அரட்டையடித்துக்கொண்டிருப்பார். அதனால் அவரை ரொம்ப எளிமையான நடிகை என்று பெருமையாக பேசிவந்தது கோலிவுட்.

ஆனால், அதையடுத்து சித்தார்த், விஷால், கார்த்தி என முன்னணி நடிகர்களின் படங்கள் புக்காகி விட்டதால் இப்போது அவரும் கேரவன் வசதி கேட்டு வருகிறாராம். கூடவே சத்தமில்லாமல் தனது படக்கூலியையும் உயர்த்தி விட்டுள்ள நடிகை, கதை கேட்கும்போதே, எனக்கும் முன்னணி நடிகைகள் போன்று வசதி வர்ய்ப்புகள் செய்து தர வேண்டும் என்று வார்த்தை விட்டு வருகிறாராம்.

இதனால் இதுவரை லட்சுமிமேனன் செலவு வைக்காத நடிகை என்று நினைத்த படாதிபதிகள் தடுமாறி நிற்கின்றனர்.

ஆனால் இப்படி லட்சுமிமேனன் மாறுவதற்கு முக்கிய காரணமே அந்த நஸ்ரியா நடிகைதானாம். நேரம் என்ற ஒரேயொரு படத்தில் மட்டுமே நடித்துள்ள அவருக்கு ராஜாராணியில் தனி கேரவன் வசதிகள் செய்து கொடுத்து அமர்க்களப்படுத்தி விட்டார்களாம். அதையடுத்துதான் நாமும் வாய்விட்டு கேட்டால்தான் வேலைக்கு ஆகும் என்று இப்படி கேட்டு வருகிறாராம் நடிகை.

Comments