28th of September 2013
சென்னை::தமிழ்சினிமாவில் முன்னணி நிறுவனங்களில் மிக முக்கியமான நிறுவனம்
கவிதாலயா. இயக்குனர் சிகரம் பாலசந்தரின் மகள் புஷ்பா கந்தசாமி தற்போது இந்த
நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
ஏராளமான படங்களை தயாரித்து வெளியிட்டிருக்கும் கவிதாலயா அண்மைக்காலமாக
படத் தயாரிப்பிலிருந்து சற்று ஒதுங்கியிருக்கிறது. இதற்கு பல்வேறு காரணங்கள்
சொல்லப்பட்டாலும், புலி பதுங்குவது பாய்வதற்காகதான் என்று கூறுகிறார்கள் இங்கே.
அப்படி என்ன திட்டம் இருக்கிறது அவர்களுக்கு? விசாரித்தால் மிக மிக நல்ல
விஷயங்கள்தான் காதில் விழுகிறது.
பொதுவாகவே தன் படம் ஒன்று வெளிவருவதற்கு முன்பாகவே
இன்னொரு படத்தை தயாராக வைத்திருப்பார் விஜய். தலைவா படப்பிடிப்பு நடக்கும் போதே
ஜில்லாவை தயாராக வைத்திருந்தவர் அவர். இப்போது ஜில்லாவுக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ்
படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இதற்கப்புறம்? இது குறித்துதான் அரசல்
புரசலாக காதில் விழும் செய்திகளில் கவிதாலயா பெயரும் அடிபடுகிறது. விஜய்
சம்மதித்தால் கவிதாலயாவை சுற்றியுள்ள சிறுசிறு சங்கடங்கள் சட்டென விலகி விடும்
அல்லவா?
Comments
Post a Comment