25th of September 2013
சென்னை::2011ம் ஆண்டு மலையாளத்தில் உருவான யூவ் என்ற ஹிப் ஹாப் ஆல்பத்தில் இணைந்து நடித்தவர்கள் நிவின் பாலி- நஸ்ரியா நசீம். அதில் அவர்களது கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க்அவுட்டாகி இருந்ததால்தான் நேரம் படத்தில் அவர்களையே ஜோடியாக்கினர். ஆனால் அந்த படம் எதிர்பாராத அளவுக்கு வெற்றி பெற்று, இப்போது நிவின் பாலியை விட நஸ்ரியாவை பிஸியான நடிகையாக்கி விட்டது.
தமிழில் எதிர்பாராத அளவுக்கு முன்னணி ஹீரோக்களின் படங்கள் கமிட்டாகி வரும் அதே நேரத்தில், நேரம் படத்துக்கு முன்பு அவர் தமிழில் கமிட்டான திருமணம் எனும் நிக்கா பட நாயகனான ஜெய்யுடன் அவரை இணைத்து காதல் கிசுகிசுக்களும் மின்னல் வேகத்தில் பரவிக்கொண்டிருக்கின்றன. இது தனது வளர்ச்சியை விட படு ஸ்பீடாக செல்கிறதே என்பதை அறிந்த நஸ்ரியா, இப்போது அதிலிருந்து தனது பெயரை விடுபட வைப்பதற்காக, மீண்டும் நேரம் பட நாயகனுடன் ஒரு படத்தில் இணையப்போகிறாராம்.
மலையாளத்தில் தயாராகும் அந்த படத்திற்கு ஓம் சாந்தி ஓசானா என்று பெயர் வைத்திருக்கிறார்களாம். இப்படத்தில் தமிழில் ஜெய்யுடன் நடித்துள்ள ராஜா ராணி, திருமணம் எனும் நிக்கா படங்களை விடவும் நிவினுடன் அதிக கெமிஸ்ட்ரியை உருவாக்கும் வகையில் நடித்து, ஜெய்யுடனான காதல் கிசுகிசுக்களை திசை திருப்பி விடப்போகிறாராம் நஸ்ரியா.

Comments
Post a Comment