4th of September 2013
சென்னை::சீனியர் ஹீரோக்களுடன் ஜோடி போட மறுத்து காஜல் அகர்வால், தமன்னா உள்ளிட்ட சில ஹீரோயின்கள் தங்களது பெயரை கெடுத்து கொள்கின்றனர். இதையே தனக்கு சாதகமாக்கி கொண்டவர் நயன்தாரா. ரஜினி, சரத் என அறிமுக கட்டத்திலேயே சீனியர் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு டாப் இடத்தை பிடித்தார். இந்த பாணியை பின்பற்றுகிறார் அஞ்சலி.
டோலிவுட் சீதம்மா வாகிட்லோ சிறுமல்லே செட்டு படத்தில் வெங்கடேஷ் ஜோடியாக நடிக்க பல ஹீரோயின்கள் மறுத்த நிலையில் அஞ்சலி துணிச்சலாக களம் இறங்கி டோலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். மீண்டும் வெங்கடேஷ் ஜோடியாக மசாலா படத்தில் நடிப்பதுடன் ஷூட்டிங்குக்காக ஜப்பான் பறந்திருக்கிறார்.
Comments
Post a Comment