27th of September 2013
சென்னை::இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமரா படத்தில் காமெடி நடிகர் பரோட்டா சூரிக்கு சீரியசான வேடமாம்.
சூது கவ்வும் திரைப்படத்துக்குப் பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம்தான் இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமரா. ரௌத்திரம் படத்தை இயக்கிய கோகுல் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். காமெடியை பின்னணியாக கொண்டு முற்றிலும் மாறுபட்ட கதையம்சத்தில் படம் உருவாகிறது.
இதில் சுமார் மூஞ்சி குமார் கேரக்டரில் விஜய் சேதுபதியும் சிடுமூஞ்சி பாலா கேரக்டரில் அஸ்வின் என்ற நியூபேசும் நடிக்கிறார்கள். அட்டக்கத்தி நந்திதா விஜய் சேதுபதியின் ஜோடி,சுப்பிரமணியபுரம் ஸ்வாதி அஸ்வின் ஜோடி.
படத்தில் இன்னொரு முக்கியமான கேரக்டர் இருக்கிறது. அந்த கேரக்டரின் பெயர் “ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு”. இந்த கேரக்டரில் நடிப்பவர்
பரோட்டா சூரி. இவரது கேரக்டரை மட்டும் சஸ்பென்சாக வைத்திருக்கிறார்கள். ஏன் வச்சிருக்கோம்னு படத்தோட டைரக்டர் இப்படிச் சொல்கிறார்….
வழக்கமா சூரிய நீங்க காமெடியனாத்தான் பார்த்திருப்பீங்க. இதுல படு சீரியசான கேரக்டர், சூரியோட நிஜமான நடிப்பு திறமைய இதுல பார்க்க போறீங்க. அவர்தான் படத்தோட கீ பாயிண்ட். படம் ரிலீசுக்கு பிறகு சூரி கேரக்டர்தான் பேசப்படும். அதான் சஸ்பென்சா வச்சிருக்கோம்” என்று ஏகத்துக்கு பில்டப் கொடுக்கிறார் டைரக்டர் கோகுல். இப்படம் அக்டோபர் 2ம் தேதி திரைக்கு வருகிறது.
Comments
Post a Comment