காதல் கிசு கிசுவில் சிக்கியதால் பிந்து மாதவியுடன் இனி நடிப்பதில்லை: சிவகார்த்திகேயன் முடிவு!!!

16th of September 2013
சென்னை::காதல் கிசு கிசுவில் சிக்கியதால் பிந்து மாதவியுடன் இனி நடிப்பதில்லை என சிவகார்த்திகேயன் முடிவு செய்துள்ளாராம். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.
 
இதில் கெஸ்ட் ரோலில் பிந்து மாதவி நடித்தார். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாக தகவல் பரவியது. இதை உடனடியாக மறுத்தார் சிவகார்த்திகேயன்.
 
அத்துடன் தனது மனைவியை மட்டுமே காதலிப்பதாகவும் விளக்கம் அளித்தார். அத்துடன் நிற்கவில்லை. டுவிட்டரில் தனது மனைவியுடன் இருப்பது போன்ற போட்டோவையும் வெளியிட்டார். இது எல்லாமே அவரது மனைவியின் வற்புறுத்தல் காரணமாகவே சிவகார்த்திகேயன் செய்தாராம்.
 
அதேபோல் இனி பிந்து மாதவியுடன் நடிப்பதில்லை என அவர் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுவும் அவரது மனைவியின் விருப்பம் காரணமாகவே அவர் முடிவு எடுத்திருப்பதாக கோடம்பாக்கத்தில் பேசப்படுகிறது.

Comments