யுவன் ஷங்கர் ராஜாவை தொடர்ந்து ஹாரிசுடன் செல்வராகவன் மோதல்!!!

25th of September 2013
சென்னை::யுவன் ஷங்கர் ராஜாவுடன் ஏற்பட்ட மோதலை போல் ஹாரிஸ் ஜெயராஜுடனும் செல்வராகவனுக்கு மோதல் ஏற்பட்டிருக்க¤றது.
ஆர்யா, அனுஷ்கா நடித்துள்ள படம் ‘இரண்டாம் உலகம்Õ. சுமார் 2 வருடமாக இதன் ஷூட்டிங் நடந்து முடிந்துள்ளது. செல்வராகவன் இயக்கும் இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார்.  ஷூட்டிங் தொடங்கி நீண்ட காலம் ஆகிவிட்டதால் படத்தை வெளியிடுவதில் தீவிரம் காட்டி வருகிறார் செல்வராகவன். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. ஆனால் பின்னணி இசை அமைப்பதற்கு ஹாரிஸ் ஜெயராஜ் தாமதப்படுத்தினாராம். இதனால் செல்வராகவனுக்கும், ஹாரிஸுக்கும் மனக் கசப்பு ஏற்பட்டதாக தெரிகிறது.

இதையடுத்து அனிரூத்தை வைத்து பின்னணி இசையை முடிக்க முடிவு செய்துள்ளார் செல்வராகவன். சமீபத்தில் அனிரூத்தை சந்தித்த செல்வராகவன் இது பற்றி பேசி, அவரது ஒப்புதல் வாங்கிவிட்டார். தற்போது ‘இரண்டாம் உலகம்Õ படத்தின் பின்னணி இசை அமைப்பதற்கான ஏற்பாடுகளை அனிரூத் மேற்கொண்டிருக்கிறார்.

இது பற்றி தயாரிப்பாளர் தரப்பில் விசாரித்தபோது, ‘ஹாரிஸ் ஜெயராஜுக்கும், செல்வராகவனுக்கும் எந்த பிரச்னையும் இல்லை. தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய உள்ளதால் பிற பணிகளில் பிஸியாக இருக்கும் ஹாரிஸ் ஜெயராஜுக்கு பதிலாக பின்னணி இசை அமைக்க அனிரூத்திடம் பேசப்பட்டிருக் கிறதுÕ என்றனர்.

சம்பளம் விஷயம் தொடர்பாக யுவன் ஷங்கர் ராஜாவுடன் செல்வராகவனுக்கு மோதல் ஏற்பட்டது. அதேபோன்ற சூழல்தான் இப்போது ஹாரிசுடன்
அவருக்கு மனக்கசப்பு ஏற்பட காரணம் என பேச்சு அடிபடுகிறது.

Comments