17th of September 2013
சென்னை::தமிழில் விஜய்க்கு ஜோடியாக நண்பன் படத்தில் நடித்த இலியானா, அதையடுத்து பாலிவுட்டுக்கு சென்று விட்டார். இவரது உயரமான ஒல்லிக்குச்சி உடல்கட்டுக்கு அங்கு பெரும் வரவேற்பு கிடைத்ததால், முழுநேர பாலிவுட் நடிகை போன்று மும்பையிலேயே வீடு பார்த்து குடும்பத்தினரோடு குடியேறினார் இலியானா.
ஆனால், திடுதிப்பென்று தெற்கில் இருந்து ஸ்ருதிஹாசன், அமலாபால் போன்ற சில நடிகைகளும் பாலிவுட் களத்தில் இருப்பதால், அசினைப்போலவே இலியானாவுக்கும் இவர்களால் தலைவலி ஏற்பட்டுள்ளதாம். காரணம், தென்னிந்திய நடிகை என்று அசினுக்குப்பிறகு இலியானாவைத்தான் அங்குள்ளவர்கள் பெருமையாக சொல்லிக்கொண்டிருந்தார்களாம்.
இந்த நிலையில், அடுத்தடுத்து சில தென்னிந்திய நடிகைகள் அங்கு அதிரடியாக பிரவேசித்திருப்பது இலியானாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாம். இதனால், தெற்கில் இருந்து பாலிவுட்டுக்கு அதிகமான நடிகைகள் வருவது நமக்கிருக்கிற மரியாதையை குறைத்து விடும் என்பதை உணர்நதுவிட்ட இலியானா, மீண்டும் தமிழ், தெலுங்கில் நடிப்பதற்கான முயற்சியினை முடுக்கி விட்டுள்ளாராம்.
அதோடு, மீண்டும் உங்களால் மார்க்கெட்டை விட்ட இடத்திலிருந்து தொடர முடியுமா? என்று கேட்பவர்களிடத்தில், நான் ஆரம்பத்திலிருந்தே தென்னிந்திய சினிமாவின் செல்லப்பெண். அதனால், நான் சான்ஸ் கேட்டு யாருமே இல்லை என்று சொல்ல மாட்டார்கள். வேண்டுமானால் பாருங்கள் கூடிய சீக்கிரமே சில முன்னணி ஹீரோக்களின் படங்களை அதிரடியாக கைப்பற்றிக்காட்டுகிறேன் என்று தில்லாக பதிலளிக்கிறாராம் இலியானா.

Comments
Post a Comment