8th of September 2013
சென்னை::சின்னத்திரையில் ‘மெட்டி ஒலி’ சீரியல் மூலம் பிரபலமானவர் இயக்குனர் திருமுருகன். இவர் பெரிய திரையில் ‘எம்டன் மகன்’, ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இவருடைய இரண்டு படங்களிலும் நடிகர் பரத்-தான் ஹீரோ. வடிவேலு காமெடி கதாபாத்திரத்தில் இரண்டு படங்களிலும் நடித்திருந்தார்.
தற்போது இந்த கூட்டணி மீண்டும் இணையவிருக்கிறது. குடும்பக்கதை மற்றும் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த படத்தை இயக்கவிருக்கிறார் திருமுருகன். இப்படத்தில் பரத், வடிவேலும் இருவரும் நடிக்கவிருக்கிறார்கள். இப்படத்தின் துவக்கவிழா மற்றும் படப்பிடிப்பை விரைவில் நடத்த உள்ளனர்.
திருமுருகன் தற்போது ‘நாதஸ்வரம்’ என்ற மெகா தொடரை இயக்கி வருகிறார். இதுகுறித்து இயக்குனர் திருமுருகன் கூறும்போது, ‘மெட்டி ஒலி’ மூலம் எனக்கு கிடைத்த புகழ் ‘எம்டன்மகன்’ படத்திற்கும் கிடைத்தது. அதுபோல் இப்போது ‘நாதஸ்வரம்’ தொடருக்கு கிடைத்திருக்கும் புகழ் அடுத்து இயக்கவிருக்கும் படத்திற்கும் கிடைக்கும் என்றார்.
இப்படத்தின் தலைப்பு மற்றும் பிற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments
Post a Comment