'அம்மா' ஆசி வடிவேலுவுக்கு சுத்தமா இல்ல... முழுக்க முழுக்க விவேக்குக்குதான்!!!

19th of September 2013
சென்னை::ரூ 30 கோடி செலவழிக்கப்பட்டு பிரம்மாண்டமாக நடத்தப்படும் ஒரு மேடையில் தானும் எப்படியாவது இடம்பிடித்து விட வேண்டும் என ரொம்பவே முயற்சித்தார் வடிவேலு.
ஆனால் அதற்கு இடம்தரவில்லை ஆளும்தரப்பு!அதேநேரம், காமெடி நடிகர் விவேக்குக்கு முழு அனுமதி கிடைத்திருக்கிறது.
 
நாளை மறுதினம் இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் தொடங்குகிறது. இந்தியத் திரையுலகமே இங்கு ஒன்று கூடுகிறது.இந்த விழாவில், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத் திரையுலகைச் சேர்ந்தவர்கள் மொத்தம் இரண்டு நாட்களுக்கு கலைநிகழ்ச்சிகளை நிகழ்த்த உள்ளனர்.'ஜெயலலிதாவை வாழ்த்தி காமெடி ட்ராமா ஒன்றை நடத்த விரும்புகிறேன். பணமெல்லாம் வேண்டாம்... அம்மாவின் ஆசி கிடைச்சி, நானும் சினிமாவுக்கு முழுசா திரும்புன மாதிரியிருக்கும். முதல்வர் அம்மாவை நான் ஏற்கெனவே வாழ்த்திப் பேசியவன்தான்," என கலைநிகழ்ச்சிக்குப் பொறுப்பேற்றுள்ள குழுவிடம் கேட்டாராம் வடிவேலு.
 
விஷயம் முதல்வர் காதுக்குப் போனது. நோ என ஒற்றைச் சொல்லில் மறுத்தவர், தன்னை வாழ்த்தி நாடகம் நடத்த வேறு யார் யாரெல்லாம் அனுமதி கேட்டிருக்கிறார்கள் என்று பார்த்து, அதில் நடிகர் விவேக் பெயரை மட்டும் டிக் அடித்தாராம்.விஷயம் தெரிந்த விவேக் முழு வீச்சில் காமெடி ஸ்க்ரிப்ட் தயாரித்துக் கொண்டுள்ளார். வடிவேலுவை வைத்து மீண்டும் படமெடுப்பதாக அறிவித்திருப்பவர்களோ திகிலில் இருக்கிறார்கள்.

Comments