15th of September 2013
சென்னை::பூஜா காந்தியின் அரை நிர்வாண போஸ்டரால் கன்னட பட உலகில் பிரச்னை எழுந்துள்ளது.தமிழில் ‘திருவண்ணாமலை’, ‘கொக்கி’ உள்ளிட்ட சில படங்களில் நடித்திருப்பவர் பூஜா காந்தி. இவர் தற்போது கன்னட படங்களில் நடித்து வருகிறார். அரை நிர்வாண தோற்றத்தில் இவர் இருப்பதுபோன்ற போஸ்டர்கள், பெங்களூர் நகரம் முழுவதும் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இது, ‘தண்டுபாலயா’ என்ற படத்தின் ஸ்டில். படம் வெளியாகி பல மாதங்கள் கடந்த நிலையில் இப்போது திடீரென இந்த போஸ்டர் ஒட்டப்பட்டிருப்பது பிரச்னையை கிளப்பியுள்ளது.இனி எந்த படத்துக்கும் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் ஆபாச போஸ்டர்கள் ஒட்டக்கூடாது என்று கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பும், ஆதரவும் எழுந்துள்ளது. பெண்கள் அமைப்பு உள்ளிட்ட பலர் அரசு உத்தரவை வரவேற்றிருக்கின்றனர். இதுபற்றி கன்னட இயக்குனர் கவிதா லங்கேஷ் கூறும்போது, ‘‘கர்நாடக பிலிம் சேம்பரின் அங்கீகாரம் பெற்றுதான் பட போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன. அதற்கு ஆட்சேபம் தெரிவிப்பது சரியல்ல. இதுகுறித்து அரசும், பிலிம்சேம்பரும் கலந்துபேசி இப்பிரச்னை குறித்து சரியான தீர்வு காண வேண்டும்’’ என்றார்.
‘தண்டுபாலயா’ பட தயாரிப்பாளர் சீனிவாச ராஜா கூறும்போது, ‘‘பெண்களை மையமாக வைத்து இயக்கும் படங்களில் அந்தந்த கேரக்டருக்கு ஏற்பத்தான் போஸ்டரும் வெளியிடப்படுகிறது. தாசி பற்றிய கதையில் முழுமையாக உடலை மறைத்துக்கொண்டு நடிக்க முடியாது. அப்படி காட்சி அமைத்தால் பெண்களுக்கு எதிராக நடக்கும் அவதூறுகளை சுட்டிக்காட்ட முடியாது’’ என்றார்.

Comments
Post a Comment