29th of September 2013
சென்னை::பிரணிதாவுக்கும் கன்னட பட தயாரிப்பாளருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சகுனி’ படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்தவர் பிரணிதா. தற்போது தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வருகிறார். கன்னடத்தில் ‘புத்து’ என்ற படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்திருந்தார். ஆனால், ஷூட்டிங் வராமல் டிமிக்கி கொடுக்கிறார் என்று தயாரிப்பாளர் வரதன், இயக்குனர் குருவேந்திரா புகார் கூறுகின்றனர். அவர் மீது கன்னட பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
இதுபற்றி வரதன் கூறும்போது, ‘வேறு எந்த படங்களும் கைவசம் இல்லாத நிலையில் எங்கள் படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்தார் பிரணிதா. அட்வான்சும் வாங்கிக்கொண்டார். ஆனால், பட தொடக்க விழாவுக்கு வரவில்லை. அதனால் அவர் இல்லாத காட்சிகளை படமாக்கினோம். பிறகு 2 நாள் ஷூட்டிங் வந்தார். அதன்பின், உபேந்திரா படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட பிறகு எங்கள் ஷூட்டிங்குக்கு வராமல் இழுத்தடித்தார். இதனால் ஷூட்டிங் நின்றது‘ என்றார்.
பிரணிதா கூறும்போது தன் மீது தவறு எதுவும் இல்லை என்றார். ‘புத்து படத்துக்கு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடிக்க கால்ஷீட் தந்திருந்தேன். அதை அவர்கள் பயன்படுத்தாமல் வீணடித்தார்கள். அதற்கு ஏதேதோ காரணம் சொன்னார்கள். அவர்கள் ஷூட்டிங்கிற்கு தயாரானபோது நான் வேறு படங்களில் பிஸியாகி விட்டேன். இதை அவர்களிடம் சொல்லி அட்வான்சை திருப்பி கொடுத்து விட்டேன். அதோடு பிரச்னைகள் முடிந்துவிட்டது. ஆனால் இப்போது எதற்காக என் மீது புகார் செய்கிறார்கள் என்று தெரியவில்லை‘ என்றார் பிரணிதா.
Comments
Post a Comment