பட அதிபர் சங்க தேர்தல்: கமலஹாசன் ரஜினி, குஷ்பு ஓட்டு போட்டனர்!!!

7th of September 2013
சென்னை::தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் இன்று நடந்தது. நந்தனம் ஓய்.எம்.சி.ஏ. மைதானத்தில் காலை 9 மணிக்கு ஓட்டுப் பதிவு துவங்கியது. நீதிபதிகள் எஸ்.ஜெகதீசன், கே.வெங்கட்ராமன் தேர்தல் அதிகாரிகளாக இருந்து இந்த தேர்தலை நடத்தினர். வாக்கு சாவடியில் எலக்ட்ரானிக் ஓட்டுப் பதிவு எந்திரம் வைக்கப்பட்டு இருந்தது.

ஏராளமான போலீசாரும் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு இருந்தனர். ஓட்டுப்பதிவு நடந்த இடத்தில் ஏராளமான தயாரிப்பாளர்கள் திரண்டு நின்று தங்கள் அணிக்கு ஆதரவு திரட்டிய படி இருந்தனர். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேரில் வந்து ஓட்டு போட்டார்.

நடிகர் ரஜினிகாந்த் காலை 10.30 மணிக்கு ஓட்டு போட்டார். தனது அடையாள அட்டையை வாக்குச்சாவடி அதிகாரிகளிடம் காண்பித்து விட்டு பட்டனை அழுத்தி ஓட்டை பதிவு செய்தார். நடிகர்கள் கமலஹாசன், ராதாரவி, மன்சூர் அலிகான், சசிகுமார், எஸ்.வி.சேகர், நடிகைகள் குஷ்பு, தேவயானி, நிரோஷா போன்றோரும் ஓட்டு, போட்டனர்.

தலைவர் பதவிக்கு போட்டியிடும் கே.ஆர்.கலைப்புலி தாணு, துணை தலைவர்கள் பதவிக்கு போட்டியிடும் டி.ஜி.தியாகராஜன், சுபாஷ் சந்திரபோஸ் பவித்ரன், கதிரேசன் பட்டியல் கே.சேகர் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் சிவசக்தி பாண்டியன் டி.சிவா, ஞானவேல் ராஜா சங்கிலி முருகன், தேனப்பன் ஆகியோரும் ஓட்டு போட்டனர்.

எஸ்.ஏ.சந்திரசேகரன், புஷ்பா கந்தசாமி, கமீலாநாசர், ஆர்.கே.செல்வமணி, ஏ.எல்.அழகப்பன், தங்கர் பச்சான், மனோஜ் குமார், கோவை தம்பி, காஜா மைதீன், சித்ராலட்சுமணன், எச்.முரளி, ஜாகுவார் தங்கம், ஆர்.வி.உதயகுமார், நாஞ்சில் பி.சி.அன்பழகன், வி.சேகர், கருணாஸ், எடிட்டர் மோகன், ஜி.ஆர், கருநாகராஜன், அகத்தியன் உள்பட பலர் ஓட்டளித்தனர். வாக்கு சாவடிக்கு வேட்பாளர் உருவப்படம் அணிந்து வந்தவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மோதல் ஏற்பட்டது.

வாக்கு சாவடி அருகில் பேனர் வைக்கவும் சிலர் எதிர்த்தனர். இதையடுத்து அவை அப்புறப்படுத்தப்பட்டன. தேர்தலில் மூன்று அணிகள் மோதுகின்றன. ஓட்டுப்பதிவு எந்திர கோளாறால் 10 நிமிடம் தடங்கல் ஏற்பட்டது. மாலை 4 மணி வரை ஓட்டுப் பதிவு நடைபெறும் இன்று மாலையே முடிவுகள் அறிவிக்கப்படும்.
tamil matrimony_INNER_468x60.gif
 

Comments