13th of September 2013
சென்னை::அட்டக்கத்தி நந்திதாவுக்கு தாய்மொழியான கன்னட சினிமாவை விட, தமிழ் சினிமா மீது, அதிக ஆர்வமும், நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது. அதனால், இனி முழுநேர கோடம்பாக்க நடிகையாக முடிவெடுத்துள்ள அவர், தன் பரிவாரங்களுடன் சென்னையில் குடியேறி விட்டார்.
இதுப்பற்றி அவர் கூறுகையில், அட்டக்கத்திக்கு பின், எதிர்நீச்சல் படம் எனக்கு பெயர் வாங்கித் தந்தது. அதற்கு முன் வரை என்னை கண்டுக் கொள்ளாதவர்கள், அந்த படத்திற்கு பின் தான், வித்தியாசமான கதைகளுடன் அணுகினர். அப்படி எனக்கு கிடைத்த படங்களில் ஒன்று தான், இதற்குத்தானே ஆசைப்பட்டாய்
பாலகுமாரா.இப்படத்திற்கு பின், என் நடிப்பின் மீது, இயக்குனர்களுக்கு இன்னும் கூடுதல் நம்பிக்கை ஏற்படும். அதோடு, முன்னணி ஹீரோக்களும், என்னுடன் ஜோடி சேர விரும்புவர் என்று சொல்லும் நந்திதா, இப்போது தமிழும் நன்றாக பேசுகிறார். எதிர்காலத்தில் தனக்குத் தானே டப்பிங் பேசும் ஐடியாவும் வைத்துள்ளார்.
Comments
Post a Comment