28th of September 2013
சென்னை::லண்டன் ஆஸ்திரேலியா என்று வெளிநாட்டு ரசிகர்களுக்காக தன் நேரத்தை அதிக
நேரம் செலவிட ஆரம்பித்திருக்கிறார் இசைஞானி இளையராஜா. முன்பெல்லாம் இவரை இதுபோன்ற
நிகழ்ச்சிகளுக்கு அழைக்க படாத பாடு பட வேண்டியிருக்கும். ஆனால் இப்போதெல்லாம் இந்த
அழைப்புகளை உற்சாகமாக ஏற்றுக் கொள்கிறாராம் இளையராஜா. காரணம்? பேஸ்புக் இன்டர்நெட்
போன்ற உலகளாவிய விஷயங்களை அவர் புரிந்து கொண்டதுதானாம்.
ஐயா... உங்களுக்கென பேஸ்புக்கில் இவ்வளவு அமைப்புகள் இயங்கிகிட்டு இருக்கு. உலகம்
முழுவதும் இருக்கிற உங்கள் ரசிகர்கள், உங்களை நேரில் பார்க்க மாட்டோமா என்று
தவமிருக்கிறார்கள் என்றெல்லாம் ஆதாரத்தோடு இவற்றை அவருக்கு காண்பிக்க, நெக்குருகி
போனாராம் ராஜா. அதற்கப்புறம்தான் இது போன்ற இசை நிகழ்ச்சிகளுக்கு அவர் சம்மதம்
சொல்ல ஆரம்பித்ததும். இன்று ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரத்தில் இசைஞானியின்
இசைக்கச்சேரி நடக்கவிருக்கிறது. சுமார் 80 பேர் கொண்ட குழுவுடன் அங்கு
பயணித்திருக்கிறார் ராஜா.
Comments
Post a Comment