20th of September 2013
சென்னை::மலையாள நடிகர்களில் ஃபேஸ்புக்கில் அதிக ‘லைக்’குகள் பெற்று முன்னணியில் இருந்து வந்தவர் மலையாளத்தின் சூப்பர் ஸ்டார் மோகன்லால்! அவருக்கு அடுத்த படியாக மெகா ஸ்டார் மம்முட்டி இருந்து வந்தார்.
சென்னை::மலையாள நடிகர்களில் ஃபேஸ்புக்கில் அதிக ‘லைக்’குகள் பெற்று முன்னணியில் இருந்து வந்தவர் மலையாளத்தின் சூப்பர் ஸ்டார் மோகன்லால்! அவருக்கு அடுத்த படியாக மெகா ஸ்டார் மம்முட்டி இருந்து வந்தார்.
நேரம்’ படத்தின் ரிலீசுக்குப் பிறகு இந்த வரிசையில் இணந்த நடிகை நஸ்ரியா நசீம் மூன்றாவது இடத்தைப் பிடித்துக் கொண்டு, சூறாவளியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான ‘லைக்’குகள் பெற்று சமீபத்தில் மம்முட்டியை மூன்றாவது இடத்திற்குத் தள்ளி இரண்டாவது இடத்தைப் பிடித்துக் கொண்டார் ‘நய்யாண்டி’ நாயகி! இது மலையாள சினிமா வட்டாரத்தில், குறிப்பாக மம்முட்டியின் ரசிகர்களிடத்தில் ஒரு சலசலப்பை ஏற்படுத்த,
இப்போது சூப்பர் ஸ்டார் மோகன்லாலையும் பின்னுக்குத் தள்ளி அவரது இடத்தைப் பிடித்துக் கொண்டுள்ளார் ‘குட்டிப் பொண்ணு நஸ்ரியா! அதாவது இன்றைய நிலவரப்படி நஸ்ரியாவுக்கு கிடைத்திருக்கும் ‘லைக்’குகள் 11,18,890, மோகன்லாலுக்கு கிடைத்திருக்கும் ‘லைக்’குகள் 10,95,353. நிலைமை இப்படியிருக்க, மேலும் சாதனை படைக்கும் விதமாக நஸ்ரியாவை ‘லைக்’ செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது! அதிர்ஷ்டக்காரி பொண்ணு நஸ்ரியா!
Comments
Post a Comment