தெலுங்கில் பாடகரானார் கார்த்தி!!!

30th of September 2013
சென்னை::தமிழை தொடர்ந்து தெலுங்கிலும் பின்னணி பாடகராக அவதாரம் எடுத்துள்ளார் கார்த்தி.
 
சகுனி,அலெக்ஸ்பாண்டியன் சறுக்கல்களுக்குப் பிறகு கார்த்தி நடிப்பில் திரைக்கு வரவிருக்கும் படம் பிரியாணி. இந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். படத்தில் கார்த்திக்கு ஜோடியாக முதன்முறையாக ஹன்சிகா நடித்துள்ளார்.
 
இவர்களுடன், ராம்கி, மான்டி தக்கார், சாம் ஆண்டர்சன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.
படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். யுவன் இசையில் வெளியாகவிருக்கும் 100வது படம் என்பதால் பிரியாணி ஆரம்பிக்கும் போதே படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
 
 இதனிடையே படத்தின் தெலுங்கு பதிப்பிற்காக நடிகர் கார்த்தி பாடல் ஒன்றை பாடியிருக்கிறார். ஏற்கெனவே இந்தப் படத்துக்காக கார்த்தி தமிழில் ஒரு பாடலை பாடியிருப்பது நினைவிருக்கலாம்.
 
அண்ணன் விளம்பரம் ஒன்றிற்காக பாடகர் அவதாரம் எடுத்தார், ஆனால் தம்பியோ கொஞ்சம் அட்வான்ஸாக சென்று படத்திலேயே பாடலை பாடியுள்ளார்.

Comments