28th of September 2013
சென்னை::தமிழகத்திலேயே பிரபலம் என்ற பெயர் நடிகை திரிஷாவுக்குக் கிடைத்துள்ளது.
இணையதள பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனமான மெக்காபி நடத்திய சர்வேயில்தான் இது தெரியவந்துள்ளது.
கிட்டத்தட்ட 80க்கும் மேற்பட்ட வைரஸ் பாதிப்புக்குள்ளான இணையதளங்களில் நடத்திய ஆய்வில், திரிஷா என்ற பெயருடைய வைரஸ் பாதிப்பு அதிகம் இருந்ததாக இந்த நிறுவனம் கூறுகிறது.
தமிழகத்தைச் சேர்ந்த பிரபலமான விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், நடிகர்கள், அரசியல்வாதிகள் என சகல தரப்பினரையும் உள்ளடக்கிய வைரஸ் தேடுதலை நடத்தியது மெக்காபி.அதில் திரிஷாவின் பெயரில்தான் அதிக அளவிலான வைரஸ் பரப்பப்படுவதாக தெரிய வந்ததாம்.
சூர்யா, ஆர்யா, விஜய், கமல்ஹாசன், ரஜினிகாந்த், தனுஷ் மற்றும் நடிகைகள் சமந்தா, ஷ்ரேயா, ஸ்ருதி ஹாசன் ஆகியோருடைய பெயர்களிலும் வைரஸ் பரப்பப்படுகிறதாம்.
இவர்களை விட திரிஷாவின் பெயரில்தான் அதிக அளவிலான வைரஸ் படையெடுப்பு நிகழ்கிறதாம்.
பிரபலங்களின் பெயரைப் பயன்படுத்தி மால்வேர்களை அனுப்பி கணனிகளில் உள்ள முக்கியத் தகவல்கள், இணையதளங்களில் உள்ள தகவல்கள் மற்றும் கடவுச்சொற்களை திருடுகின்றனராம் இந்த திருடர்கள்.
இந்த விஷமிகளின் முக்கிய ஆயுதமே வால் பேப்பர்கள், நிர்வாணப் படங்கள், வீடியோக்கள்தான்.
இந்த ரூபத்தில்தான் பிரபலங்களின் பெயர்களில் இவர்கள் மால்வேர்களை அனுப்புகின்றனராம்.
Comments
Post a Comment