பெண் வேடத்தில் சந்தானம்!!!

26th of September 2013
சென்னை::எல்லா காமெடி நடிகர்களுமே ஒரு கட்டத்தில் பெண் வேடம் போட்டு விடுவார்கள். நாகேஷ் முதல் வடிவேலு வரை எல்லோருமே பெண் வேடம் போட்டிருக்கிறார்கள். அந்தவகையில் இப்போது நம்பர் ஒன் காமெடியனாக வலம் வந்து கொண்டிருக்கும் சந்தானமும் பெண் வேடமிட்டுள்ளார். ஏற்கனவே சிறுத்தை மற்றும் சிங்கம் புலி படத்தில் பெண் வேடமிட்ட சந்தானம், இப்போது ஆல் இன் ஆல் அழகுராஜா படத்திலும் பெண் வேடமிட்டு நடித்திருக்கிறார்.

படத்தில் கார்த்தி, காஜல் அகர்வாலை காதலிப்பார். ஆனால் காஜல், கார்த்தியை காதலித்தாலும் அதைச் சொல்லாமல்  பிகு பண்ணிக் கொண்டிருப்பார். அவரை வெறுப்பேற்றுவதற்காக கார்த்தி தன் நண்பன் சந்தானத்தை பெண் வேடம் போடச்சொல்லி காஜல் முன்னால் அவருடன் ரொமான்ஸ் பண்ணுவார். அதை சகிக்க முடியாமல் காஜல் தன் காதலை சொல்லிவிடுவாராம். அதற்காகத்தான் இந்த பெண் வேடமாம்

Comments