எல்லா படங்களிலும் சைட் டிஷ்ஷாக இருந்த சந்தானம் இப்போதெல்லாம் மெயின் டிஷ் ஆகிவிட்டார்!!!

2nd of September 2013
சென்னை::எல்லா படங்களிலும் சைட் டிஷ்ஷாக இருந்த சந்தானம் இப்போதெல்லாம் மெயின் டிஷ் ஆகிவிட்டார். சேட்டை படத்தில் இவரை காமெடி சூப்பர் ஸ்டார் என்று பட்டம் கொடுத்து பரவசப்படுத்தினார் அப்படத்தி
ன் டைரக்டர் கண்ணன். இந்த ஒரு விஷயம் போதாதா? பலரது மெயின் சுவிட்சில் கையை வைத்து ஆபரேட் செய்ய ஆரம்பித்துவிட்டது இந்த மெயின் டிஷ். கண்ணனுக்கு ஒரு படம் இயக்க வாய்ப்பு கொடுங்க என்று தனக்கு நெருக்கமான ஹீரோக்களிடம் ரெகமண்ட் செய்கிறாராம்.
 
சமீபத்தில் கார்த்தியிடம் அப்படியொரு கோரிக்கையோடு இவர் செல்ல, ‘நீங்களும் நானும் சேர்ந்து நடிச்சா அந்த படம் ஒரே கலகலப்புதான்னு ஊருக்கே தெரியும். ஆனால் அந்த உரிமையை வச்சுகிட்டு நீங்க என்னை வற்புறுத்தக் கூடாது. ஐ ஆம் ஸாரி’ என்றாராம் அவர். வரிசையாக தோல்விப்படங்களே கொடுத்துவரும் கண்ணனை எதற்காக லக்கேஜ் போல சுமக்கிறார் சந்தானம்?
 
எல்லாம் ஒரு பட்டம் படுத்துற பாடு….

Comments